அந்த கடவுளை கண்டால் !!!

27 Jun 2020 Admin

மாயம் நிறைந்த உலகமடா,
அதில் நீயும் நானும் காகிதமடா;
காற்றுகள் வீசும் திசையின் 
எதிரே பயணிக்கும் சிறு துகளடா
வாழும் நொடிகள் நிரந்தரமில்லை,
வாழும் நோக்கம் புரியவில்லை,
வாழ்ந்த நேரங்கள் கணக்கில்லை,
போகும் தூரம் தெரியவில்லை
 
சுற்றி நடக்கும் நாடகங்கள் அனைத்தும், 
எழுதப்படாத உன் திரைக்கதைகள்
வரும் நேரம் தெரியுமாடா நமது முகங்கள்,
அது முடிந்தப்பின்னால் எழுதப்படும் உன் திரைக்கதைகள்
 
நீ அழுதாலும், துடித்தாலும் கைக்கொடுக்க யாருமில்லை,
உன் தலையெழுத்தை மாற்றி அமைக்க ஒரு வழியுமில்லை
 
விலை மதிப்பில்லாத ஒரு காகிதம் , 
விலைபோவாய், உன் கையில் இருந்தால்
 
நடந்ததை நீ, யோசிக்கும் நொடியில் முடிந்துவிடும் ,
இருந்தும் பயனில்லாமல், போகும் இந்த ஜனனமடா
 
கண் திறந்தால்.... அந்த கடவுளை கண்டால் !!!
 
சிலைகளின் முன்னாள் கேட்ட கேள்விகள், 
பதில் தெரியாமல் நின்றது ஏனோ,
என் காணிக்கைகளின் எண்ணிக்கை குறைவோ..
 
உன்னிடம் விலை பேச தெரியாத காரணத்தினால்,
உன் உலகிற்கு என்னை கொண்டு வந்தாயோ..
 
உன் மேல் நம்பிக்கையில், பல அப்பாவிகள் மாநிலத்தில்,
தன்னை நம்பாமல், உன்னிடம் விலை போவதேனோ..
 
எனக்கு மறு பிறவி  என்று இருந்தால்,
உன்னிடம் விலை போக அருள்வாய்
 
இதுவும் ஒரு வரம் தான்,
அந்த கடவுளை கண்டால் !!!