அன்புள்ள அம்மா

By Admin - 23 Jan 2023 351 0

அன்புள்ள அம்மா,
உன்போல் யாருமில்லையே.
என்னை - உன்போல் யாரும்
அழைத்ததில்லையே..

நான் சொன்ன முதல்
கவிதையும் நீ - நான் 
எழுதிய முதல் தமிழும் நீ...

அடிசில், அடி வாயில், 
யானை பலமென்றாய் - என் 
பலம் நீதானென்று,
யாரிடம் சொல்வேன்...

ஆயிரம் உறவுகள் - நீ
சொல்லி தந்தாயே - பசி 
என்னும் வார்த்தை 
இருப்பதை - நீ
மறக்க செய்தாயே...

பல நாட்கள் வந்தாலும்
என்றும் கண்டதில்லை 
உனக்கு விடுமுறை...

மண்ணில் வரும் 
முன்னே - என்னை 
வழிநடத்தி சென்றாயே..

அம்மா,
என்ற வார்த்தையில்லை 
என்றால் - கடவுளும்
அனாதை தான்...

Add Your Comments

Say Something

 

Comments

No comments.