அப்படிதான் பாட்டி
By Admin - 04 May 2021 555 0
பள்ளிகூடத்தின்
வாசம் யில்லை,
மருத்துவமனைக்கு
செல்ல வில்லை,
மருந்தகம் பற்றி
அறிந்த தில்லை,
உணவே,
மருந்தாய் கொண்டாய்,
நோய் தடம்
தெரிய வில்லை..
உலகத்தில்
இன்றும்
அறியப்படாத
அறிவியல் ரகசியம்,
பாட்டி வைத்தியம்...
நீ யில்லை,
கதைகள் மறைந்தது,
வரலாறு மறந்து போனது,
அன்பும் மறந்து போனது,,,
அன்றே பிறந்த
நொடி பொழுது,
எல்லாரும் சிரித்தார்கள்
என் அழுகையில்,
நீ மட்டும் நன்றி
சொன்னாய் நம்
குல தெய்வத்திற்கு..
சின்ன அழுகையோடு,
குரல் கேட்க - நீ
பிள்ளை ஈன்று கண்டதோடு
கோடி சுகம் கொண்டாய்..
வலிகளில் ஈரம் யில்லை,
என்னை உன் பிள்ளை,
அடிக்கும் பொழுது,
கோடி வலி கொண்டாய்...
இன்றும்
பல முறை,
விழுகிறேன்,
கை பிடிக்க,
நீயும் இல்லை;
ஒளிந்துகொள்ள,
உன் புடவையும் இல்லை..
குழந்தையும்,
தெய்வமும் ஒன்று,
ஏனோ மறந்தார்கள்
அகவை கூடினால்,
மனதளவில் அவர்களும்
குழந்தை தான்..
நீயும்,
அப்படிதான் பாட்டி !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
30 Mar 2024
எல்லாம் அவன் செயல்...
ஹைக்கூ...இரத்த வெள்ளத்தில் கடைசி நிமிடம் - நான்;அடிபட்ட லாரியின்,நெற்றியில் "எல்லாம் அவன் செயல்"...
21 Apr 2023
பார்த்த முகம் - ஒரு ஹைக்கூ...
மினுமினுக்கும் விளக்குவேகமாய் பூச்சிகள்குரைக்கும் நாய்கள்சிதறும் கூட்டங்கள்ரத்தத்தின் வாசம்தினம் பார்த்த முகம்வீட்டின் சுவற்றில்.....
25 Jul 2021
ஒரு புகை வண்டிப் பெட்டியின் கத...
ஒரு நாள், அந்தி நேரம். மேகங்கள் கருகுமென்று சூழ, ஜில்லென்று காற்று, மரங்கள் அருகில் இல்லையென்றாலும், காற்று நாலா பக்கமும் அடிக்க, கோயிலுக்கு செல்ல செல...