இரண்டும் ஒன்றாய் வாழ்க...

05 Jul 2020 Admin

காதல் காமம் வேறுபாடு 
புரிய மறுக்கிறான், 
காம போர்வைக்குள், 
காதலை ஏனோ திணிக்காரன்

இச்சை கொண்ட ஆசைக்கு 
விலைமகள் கேக்குதே, 
அதன் பெயர்தான் காதல் 
என்று ஏற்குதே..

காமம் தீர்ந்த வேலையில்
காதலை தேடி அலைகிறான், 
காதல் பேரை சொல்லி 
மீண்டும் காமம் தேடுகிறான்..

அன்புதான் காதல் என்று
புரியும் போது, 
அந்த காமம் - அவனை 
கொன்று விட்டு போகுதே

இச்சை என்றும் அழிய போவதில்லை, 
இது காதல் காமம் சண்டையிடும் போர்க்களம்

காதல் உள்ளே காமம் வரும், 
அதனுள் காதலும் தெரியும் 
இரண்டும் இல்லை என்றால், 
இந்த பூமி நின்று போய் விடும்

இரண்டும் ஒன்றாய் வாழ்க
இந்த ஜென்மம் தீரும் முன்னே !!!