இருக்கும் இடமே போதும்

By Admin - 22 Jun 2024 57 0

ஒன்றாம் வகுப்பறையில் நுழைந்ததும், சட்டை காலரை தூக்கி விட்டு, தலையை கோதி கொண்டே, உள்ளே வந்த இரண்டு நண்பர்கள் ராமும் ராவணனும் கை கோர்த்து கொண்டு, சாதனை செய்த தோரணையில் நின்றார்கள்... உடன் இருந்த சக நண்பர்கள்... 


டேய், என்னடா.. இரண்டு பேரும் இன்னிக்கு சேர்ந்து கலக்குறீங்க.. உங்க வீட்டுல இன்னிக்கு சாப்பாடுக்கு பதிலா சப்பாத்தி கொடுத்தாங்களா..


அதற்கு ராம்,


ஹஹஹஹ....அதெல்லாம் இல்லை டா பார்த்தா.....நாங்க இரண்டு பேரும், ஒருநாள் ஸ்கூல் முடிச்சிட்டு போறப்போ, அங்க ஒரு ரயில்வே கேட் இருந்துச்சு. ரொம்ப நேரமா ரயில் வரவே இல்லை... எங்களுக்கு செம போர் அடிச்சுச்சு.. பக்கத்துல இருந்த கடையில, சாக்லேட் சாப்பிட போனா, காசு கேட்டாங்க.. உடனே, ஏன் நண்பன் ராவணன் சொன்னான், 


நாங்க ஒண்ணாவது படிக்கிறோம் அண்ணா, எங்கே அப்பா தான் வேளைக்கு போறாங்க..அவங்க கிட்ட தான் காசு இருக்கும்.. எங்க கிட்ட புக்ஸ் தான் இருக்கு. இங்கலீஷ் புக் இருக்கு அண்ணா, அது கடையில போட்டா விலை அதிகம்.. அதை வெச்சுக்கிட்டு இரண்டு சாக்லேட் தாங்க சொன்னான்... அவரு கோபம் ஆகி, போடா, போய் படிங்க..இல்லை இந்த நாய் மாதிரி கஷ்ட படனும்... அங்க பாரு, தண்டவாளத்துல ஒண்ணுக்கு அடிக்கிறது... ஒரு உருப்படி இல்லை...படிக்கல இப்படி தான் சுத்தனம்...


அப்போதான், எங்களுக்கு ஒரு ஐடியா வந்துச்சு.. அன்னிலேந்து, தினமும் அந்த தண்டவாளம் ஓரத்துல ஒண்ணுக்கு அடிச்சு விளையாடுனோம்.. ரொம்ப ஜாலியா இருக்கும்... அதுவும் ரயில் வரப்போ...இன்னும் ஜாலியா இருக்கும் அந்த காத்துக்கு..... .. 


உடனே, இராவணன் குறுக்கிட்டு...


திடிர்னு, இன்னைக்கு பார்த்தா, நாங்க ஒண்ணுக்கு அடிச்சா இடத்துல, இரண்டு குட்டி செடி  வந்துருக்கு... ஒன்னு நான் அடிச்சது, இன்னொன்னு இவன் அடிச்சது...என்று சொல்லி சிரித்து கொண்டே... டேய் ராமா, இன்னிக்கு போய் அந்த டீ கடை அண்ணா கிட்ட சொல்லுவோம்...அந்த செடியை பத்தி... 


அதற்கு பார்த்தா அவர்களிடம்..


டேய், நாங்களும் வரட்டுமா....எங்க ஒண்ணுக்கும் செடி ஆகட்டும்...குட்டியா தோட்டமே வரும்...அவ்ளோ போவேன்... ஹஹ்ஹஹஹ்ஹ... இங்கே இவர்கள் சந்தோஷத்தில் சிரிக்கிறார்கள்..


வேகமாக இரயில் போகும் நேரம்.. தண்டவாளத்தின் ஓரத்தில் புதிதாய் முளைத்த செடியும், காற்றுக்கு பூக்களும் சிரிக்கிறது..இருக்கும் இடமே போதும் என்றால், எதுவம் மகிழ்ச்சியே...


..

எழுத்தும், கற்பனையும்,

கல்யாணராமன் நாகராஜன்


Add Your Comments

Say Something

 

Comments

No comments.