இறைவா

05 Dec 2020 Admin

ஆயிரம் விழி  
கொண்ட இறைவா,
உன்னொரு, விழியால் 
என்னை பாராயோ, 

உன் மொழியில் 
அழைத்தால் வருவாயோ,
ஊமையாய் நின்றால் 
என் செய்வாயோ

ஆதியும் 
அந்தமும் நீயே,
யாதுமாகி இருப்பவனே,
எங்கும் எதிலும் 
ஓளிந்திருப்பவனே,
நின்னை - தேடுகிறேன் 
எங்கெங்கோ

மலைகளில், நீரில் 
மூழ்கி மறைந்தாயோ
நினைத்தால் வருவாயோ,
அழுதால் துணை நிற்பாயோ,

இறைவனே,
உன்னை வெளியில் 
தேடுவது ஏனோ - என்னுள் 
நீ யும்  இருப்பாயோ,
உணர்வுகள்;
ஆயிரம் இருப்பதால்,
அன்பில் மட்டும்
தெரிவாயோ..

வேதங்களின் 
அர்த்தமும்; நீயே,
வேள்விகள் தரும் 
கண்ணீரும் நீயே;
சிதறிய துகள் 
கற்கள் கொண்டு
சொற்பனம் கண்டனே 
அருவமாய் யல்ல
உருவமாய் கொண்டேனே..

அழைத்திட பல 
பெயர்கள் கண்டனே
உன்னை அருகில் 
காண பல கோடி 
தர கண்டனே..
வறுமையில் வர 
ஏன் மறுப்பாயோ..

உன் பாதமே 
கதி யென்று 
விழுந்தேனே;
என்னை மேலேற்ற
சக்தி தருவாயே..
இறைவா, 
நீயே 
உயிராய் கலந்தாய்..
உணர்வாய் புரிந்தாய்..
வரம்கள் ஏதும் தேவையில்லை,
துணையாய் மட்டும் வருவாய்..
என் இறைவா, இறைவா...