இவ்விடமும், அவ்விதமே....

By Admin - 09 Jun 2025 73 0

எல்லோருக்கும் உன்னிடம் 
பேச வேண்டும் என்று 
தோன்றுகிறபோது 
எனக்கு மட்டும் 
தோன்றாதா..
இவ்விடமும் 
அவ்விதமே 

கண்களுக்கு பல 
வேலைகள் இருந்தும்,
உறைந்து போனது..
என் மூளைக்கும்,
இமைக்கும் இருந்த 
தொடர்பு நின்றது…
ஓய்வின்றி துடித்த இமைகள், 
உன்னால் செயல் இழந்தது..

சுள்ளென்று வெயில்,
உன் கண்கள் கூனி 
கூறுகி ஒரு கவிதையாய் நின்றது..

சில்லென்று காற்று,
உன் கைகள்,
முடிகளை ஒதுக்குகிகையில் 
என் உலகம் கரைந்து போனது

குளிர்ந்த மழை,
உன் மெய்யும் அல்ல,
உன்னை கண்டதில் 
என் மெய்யும் 
சிலிர்த்தது…

சட்டென்று,
எதர்ச்சியாக 
உன் பார்வை 
என்னை கடக்கையில் 
இமைகளக்கு உயிர் வந்தது..
இருக்கும் இடமும்,
நினைவுக்கு வந்தது..

வேகமாய் துடித்த இதயம் கூட, 
அந்த நொடியில் ஓடாமல்,
ஏனோ தவழ்கிறது..

Add Your Comments

Say Something

 

Comments

No comments.