உனக்காகவே

By Admin - 16 Feb 2022 410 0

விரலோடு விரல் சேர்த்து 
போகாமல் போவேனோ..

தோள்மேலே தலைசாய்த்து
சாயாமல் சாய்வேனோ..

உன் மடிமீது நானும்,
உறங்கும் நேரம்,
உயிர் போனாலும்,
மீண்டும் பிறப்பேனோ..

நிழலாக உன் பின்னால்,
நாள்தோறும் தொடர்வேனோ,

நீ என்னை காணாமல் போனால்,
மண் மீது சாய்வேனோ..

மண்ணோடு மண்ணாகி 
போனாலும் கண்ணே,
உன் கண்ணோடு கண்ணாகி 
உறவாட வேண்டும் பெண்ணே..

சத்தமின்றி, நெஞ்சுக்குள்ளே,
யுத்தம் செய்தாலே - நித்தம் தோறும்,
அவள் முகம் தேடி நானும் போவேனே...

மௌனமாய் - உன் பார்வை
சின்னதாய் சிந்திடும் 
புன்னகை போதுமே,
நான் வாழ்கின்ற
நொடியும் தருவேன் 
உனக்காகவே....

Add Your Comments

Say Something

 

Comments

No comments.