உன்னை தவிர எதுவுமே

By Admin - 24 Mar 2022 125 0

உன்னை தவிர
எதுவுமே,
தோன்றவில்லை
என்றுமே...

உன் விரல்
பிடித்து
போக வேண்டும்
நெடுந்தூரமே....

உன் விழி
ஆழம் வரை
சென்றிடுவேன்
நானுமே...

போகும் வரை
போய்விடலாம்
காதலின் உள்ளே...

உன்னை
நானும்
காண்பேனோ..

கட்டி
கொண்டு
இருப்பேனோ

கைகள்
கோர்த்து
ஊர்வலங்கள்
போவேனோ...

அன்பே,

முகமூடி
ஏனடி ?
சொல்லடி காதலை...
நித்தமும்
ஞாபகம்
என்னை கொல்லுதே..

பாஷைகள்
தேவையில்லை,
மௌனங்கள்
போதுமே..

விழிகளால்
பேசடி,
காதலை
சொல்லடி
எந்தன்  ஜீவன்
வாழுமே..

காணாது
கண்டதுபோல்
கண்டதும்
காணாததுபோல்
எங்கோ சென்றாய்..

அடி,

நான் என்பது
நான் இல்லையே
நீ என்று
நான் கண்டேன்...

காணும் பிம்பம்
எல்லாம் நீயே....
நீ,
காணாது போனால்
எங்கே போவேன்
என் தோழியே...

எதுவரை
தோழியே
போவோமே
அதுவரை..

பிரிவு என்பதை
மறப்போமா
சேர்ந்தே
செல்ல
பிறந்தோமா....

Add Your Comments

Say Something

 

Comments

No comments.