உன்னை பார்த்தால் போதும்

24 Oct 2020 Admin

உன்னை,
பார்த்தால் போதும்,
என் வாழ்வின் 
துன்பங்கள் தீரும்;

அந்த வானத்து நிலவும்,
சின்னதாய் தோன்றும்
உன் மழலையில் - என்னை 
மறந்திடும் நேரம்..

உன்னை முத்தாட, நம் 
வீட்டில் விளையாட,  நான்
காத்திருக்கிறேன், நீ 
வந்தாலே போதும் - என் 
நிலைமையும் மாறும்...

தெய்வத்தின் உருவங்கள்
எதுவென்று தேடி – உன்
உருவாய் நம் வீட்டில்,
விளையாட கண்டேனடி !!!

உன்னை பார்த்தால் போதும்....