உன் காலடி சுழலில்

By Admin - 16 Mar 2025 78 0

மெட்டி,
உன் காலடி சுழலில், ஒலிக்கும் ஓசை..
அழகானக் காதலும், ஊடலும் கதைப் பேசும் இடம்..

நீயும், நானும்
ஒன்றாய் சுழல்கின்ற பந்தம்
மெட்டியின் சாட்சியாய் தொடங்குகிறது...

வீட்டில்,
தலைவி, நீ இல்லையேல்.. தலைவன் ஏது..
உன் பாதம் படும் இடம் எல்லாம், பாதை இங்கே
ஆதலால், உன்னை முன்னிறுத்தி,
உன் இரண்டாம் விரலில் நான் சுழன்றுக் கொண்டேன்..
நீயும் நானும் வேறல்லவே...

வெட்கத்திற்கும், மொழி உண்டு - அது,
உனக்கும், எனக்கும் மட்டும் தெரியும் இசை..
அகவை, அறுபது தாண்டினாலும்,
விண்ணுலகம் கடந்தாலும்
அந்த உரையாடல் உள்ளே பேசாத
பல கதைகளை சொல்லிக் கொண்டே இருக்கும்..

இன்றும் அடகுக் கடைக்கு
வெளியில் இருந்து, குறுநகை செய்யும்
ஒரே நகையே, தமிழ் மண்ணுக்கும்,
அவளுக்கும் நீயே பெருமையே...

Add Your Comments

Say Something

 

Comments

No comments.