எங்கள் குலதெய்வம்

By Admin - 19 Jun 2025 205 0

"எங்கள் குலதெய்வம்"

உயிர், உடலற்று பிரிந்து,
மீண்டும் சேரும் நேரத்தின்
இடைவெளித் தூரம் தான் – குலதெய்வம்…

படைத்தவன் அறிவான்,
தருவதும், பெறுவதும்..
கேட்காத பொழுதில் கிடைத்துவிடும்,
கைக்கு எட்டுகின்ற தூரத்தில் மறைந்துவிடும்..

தொடக்கமும் நீ ,
வேதங்கள் ஓதும்
நாதமும் நீ,
யாகங்கள் தரும் 
சாம்பலும் நீ,
அன்பில் தெரியும் 
உருவமும் நீ, 
கோபத்தின் 
தனலும் நீ,
அலங்காரியும் நீ,
பத்ர காளியும் நீ 
என்னுள்;
கருணையும் நீ,

கொற்றவா, உன்னிடம் ஒன்றும் கேட்டதில்லை,
ஆனால் நீ என்னை அறிய வைத்தாய்,
உன்னையும் அறியச் செய்தாய்…

இருள் நீண்ட பாதையில்,
ஒளியாய், நிழலாய், வழியாய்,
என்னுடன் நடந்தாய்.

வெளியே உன்னை தேடாத இடமில்லை...
ஏனோ மறந்தேன்...
உனக்கும், எனக்கும் கொண்ட உரையாடல்
உள்ளுணர்வாய், என்னுளே என்றும்...
நீயாகவே, நின்னை
எண்ணில் வீற்றிருக்கச் செய்தாய்..

நான் பிறந்த பொழுது,
எல்லோரும் சிரித்தார்கள்,
என் பாட்டி மட்டும் நன்றி
சொன்னால் எங்கள் குல தெய்வத்திற்கு..
என்
பிறப்பும் நீ,
வாழ்வும் நீ,
இறப்பும் நீ,

பரம்பரை கடந்து, 
ஒரு பரணாய்,
துணை நிற்பதுவே, 
முன்னோர்களே...

காலத்தால் அழியாத, மறையாத
ஒளியின் உருவமே, அருவமே..
அவ்விதமே,
குலதெய்வமே,
எங்கள் அங்காளம்மண்ணே....

- கல்யாணராமன் நாகராஜன்

Add Your Comments

Say Something

 

Comments

No comments.