எங்கே, நான் தேடுவேன்

11 Oct 2020 Admin

நொடி நேரம் என்னை;
காணா விடில்
வாசலில் வாடிடும் உந்தன்
அழகிய முகம் - இனி
எங்கே, அந்த பாசத்தை
நான் தேடுவேன்...

சிறு காய்ச்சல் வந்து 
நான் துடிக்க - என் 
மனம் கோணாமல்
உன் மடி தந்தாயே
இனி, எங்கே 
நான் சாய்வேன்...

என் பெயரை உன்போல்,
யாரும் சொன்னதில்லையே,
உன் செல்லம் கொஞ்சும் பேச்சை,
எங்கும் கேட்டதிலேயே..

நான் அழாமல் இருந்திட,
உன் விரல் தந்தாயே,
என்னை அழவைத்து
போனதேனோ..

ஆயிரம் உறவுகள்; நீ
சொல்லி தந்தாயே,
உன் உறவை ஏன் 
பாதியில் விட்டு சென்றாயே...

ஒரு வேலை, அடி வாயில், 
யானை பலம், என்று சொன்னாயே,
என் பலம் நீதானென்று,
யாரிடம் சொல்வேன் ;
என்னை விட்டு - எங்கே 
போனாயோ...

மண்ணில் வரும் 
முன்னே - என்னை 
வழிநடத்தி சென்றாயே,
பசி என்னும் வார்த்தை 
இருப்பதை - நீ
மறக்க செய்தாயே,

அந்த காலன் கேட்டிருந்தால்,
என் ஆயுளை - தந்திருப்பேன் 
உனக்காக..

உன் அன்பை கண்டு;
ஏனோ பொறாமை - அருகில் 
வைத்து அழகு பார்க்க - என்னை
அழவைத்தானே..

மீண்டும்,
நீ என்னிடம் வர வேண்டும்,
அந்த வரம் மட்டும் வேண்டும்,
என் மகளாக வேண்டும்..
அம்மா என்ற உருவில்..