எதிர்பாராததை எதிர்பாருங்கள்

By Admin - 14 Sep 2021 32 1

எதிர்பாராததை எதிர்பாருங்கள்..

எதிர்பார்ப்பு - "Expectation kills " . உண்மையிலே, எதிர்பார்த்தா என்ன வாகும் ?
எதிர்பார்க்கறது நடந்தா சந்தோசம், நடக்கலைனா பல ரசங்கள், வருத்தம், வன்மம், துக்கம், அழுகை,பொறாமை, கோபம், வெறுப்பு, ஒர வஞ்சனை, தனிமை, பல விதமான மிருகங்கள் நம்முள் வந்து போகும். ஒரு வேலை, எதிர்பார்ததது நடக்காம போனா, அது நமக்கு வருத்தம் ஆனா, நம்மோட தோல்வி அடுத்தவனுக்கு வெற்றி, அப்போ அவனோட எதிர்பார்ப்பு சந்தோசம். நமக்கு, நடக்கற எல்லா நிகழ்விலும், நாம எதிர்பாக்கறது நடக்கவும், நடக்காமையும் போகும்.. ஆனா, எதிர்பார்ப்பு இருந்து கிட்டே இருக்கும். ஏன்னா, எதிர்பார்ப்பு வாழ்க்கை நகர்தர்த்துக்கான எரிபொருள்.

பசில நடக்கும் போது, கீழ நூறு ரூபா பணம் கிடைச்சா, அது எதிர்பார்க்காத சந்தோசம், அதுவே, கீழ நூறு ரூபா கிடைச்சா நல்லா இருக்கும், பசிக்குதே அப்படின்னு போன, ஒரு ரூபா கூட கிடைக்காது, எதிர்பார்த்து போனா எல்லாம் சமயமும் எல்லாம் கிடைக்கும் அவசியம் இல்ல. எதிர்பார்க்காம போனா எல்லாம் கிடைக்கும் நிச்சியயும் இல்ல.. ஆனா, எதிர்பார்க்காத மனிஷனே இந்த உலகத்துல இல்ல..Expectation kills அப்படின்னு சொன்ன அந்த பெயர் தெரியாத மனுஷனோட எதிர்பார்ப்பே, யாரும் எதிர்பார்க்காதீங்க சொல்றது தான்..

கோயிலுக்கு போறோம், சாமிக்கு நன்றி சொல்ல யார் போறா. எதிர்பார்ப்பே இல்லாம கோயிலுக்கு போற ஒரு ஆள் கூட இந்த உலகத்துல இல்ல. சாமி நம்பிக்கை எப்ப வரும்னா, பண கஷ்டம், குடும்ப கஷ்டம், உடம்பு சரியில்ல, விபத்துல சிக்கி கஷ்டப்படறவங்க, குழந்தை பொறக்கற அப்போ, சாக போற அந்த நொடி, இவங்க எல்லாமே சரியாகணும் அப்படிங்கற ஆசையும் தாண்டி, எதிர்பார்ப்போட தான் வராங்க..வெளில பிச்சை எடுக்கற மனிதர்களோடு எதிர்பார்ப்பே, எனக்கு தான் போடணும்.. இவ்ளோ ஏன்,

நிலவை காமிச்சு சோறு ஊட்ட அம்மா, அந்த கை குழந்தை கிட்டே சொல்லற கதை கூட, அந்த குழந்தைக்கு எதிர்பார்ப்பு தான்.. நீ சாப்பிட உடனே, அம்மா உனக்கு சாக்லேட் தரேன், சாப்பிடு.. குறை சொல்ல வரும் சொந்தங்கள் கூட, எங்க அக்கா பையன் நாலு மாசத்துல ABCD சொல்லறான், ஸ்லோகம் சொல்லறான்..ஆமா, உங்க பொண்ணுக்கு எண்ண வயசாச்சு ? அப்படின்னு சொல்லி, அப்போதான் அம்மா சொன்ன குழந்தைகிட்ட போய் நீ ABCD சொல்லுன்னு எதிர்பாக்கற உலகம்..

குழந்தைக்கு, நிறையா அன்பு வேணும், கூடவே எப்போதும் விளையாடனும் எதிர்பார்ப்பு, ஸ்கூல் பசங்களுக்கு, மழை வருணனும் எதிர்பார்ப்பு. 1st மார்க் வாங்கற வனக்கு 1st மார்க் தான் வரணும் எதிர்பார்ப்பு, fail ஆகுறவனுக்கு pass ஆனா போதும்னு எதிர்பார்ப்பு, காலேஜ் பசங்களுக்கு புடிச்ச பொண்ணு வருணனும் எதிர்பார்ப்பு, மெக்கானிக்கல் பசங்களுக்கு ஒரு பொன்னாவது வராதான்னு எதிர்பார்ப்பு, love சொல்ல்றப்போ accept பண்ணனும் எதிர்பார்ப்பு. கடைசி வரைக்கும் நம்பள மட்டும் தான் லவ் பண்ணனும் நினைக்கறது கூட எதிர்பார்ப்பு. போற வேலை கிடைக்கும்னு எதிர்பார்ப்பு. வேளைக்கு போறப்போ சம்பளம் வருணனும் எதிர்பார்ப்பு, வீடு ஓனர்க்கு, வாடகை சரியா வருமான்னு எதிர்பார்ப்பு. அம்மா, அப்பாக்கு நாம சொல்லற பொண்ண, பையனை கல்யாணம் பண்ணனும் எதிர்பார்ப்பு, கடன் தரவணக்கு, இவன் தருவண்ணானு தரவரைக்கும் எதிர்பார்ப்பு. கடன் கேக்கறப்போ, இவங்க கிட்ட கேட்டா தருவாங்களானு எதிர்பார்ப்பு. வேலை செஞ்சா, customer பணம் தருவண்ணானு எதிர்பார்ப்பு, ஆனா, customer க்கு, கொடுத்த காசுக்கு வேலை செஞ்சு தருவாங்களானு எதிர்பார்ப்பு. பொண்ணு தரவங்க, நம்ம பொண்ண நல்லா பாத்துக்கணும் எதிர்பார்ப்பு, வர பொண்ணு நம்ம குடும்பத்தை நல்லா பார்த்துக்கணும் பையனோட எதிர்பார்ப்பு. திருடனுக்கு, மாட்டிக்காம திருடனும் எதிர்பார்ப்பு, போலீஸ்க்கு திருடன் மாட்டனும் எதிர்பார்ப்பு. மக்களுக்கு நல்ல தலைவன் வேணும் எதிர்பார்ப்பு, தலைவனுக்கு சொல்லற பேச்சை கேக்கற மக்கள் வேணும் எதிர்பார்ப்பு. கடைல வாங்கற பொருள் நல்லா இருக்குமா, நினச்சு கிட்டே எப்போதும் ஒரே கடைல வாங்கறது கூட எதிர்பார்ப்பு, சாப்பட்ற அப்போ கூட, நல்லா சாப்பிடனும் எதிர்பார்ப்பு. உள்ள போற சாப்பாடு கூட, நல்லா செரிமானம் ஆகணும் எதிர்பார்ப்பு.. கல்யாணம் ஆச்சுன்னா குழந்தைக்கு எதிர்பார்ப்பு, அதே குழந்தை எப்படா வளரும்னு எதிர்பார்ப்பு. வளர்ந்தா, மறுபடியும் குழந்தையா ஆகாதுன்னு எதிர்பார்ப்பு. சிலர்க்கு, சிலர் நல்லா இருக்கணும்னு எதிர்பார்ப்பு, சிலர்க்கு சிலர் நல்லா இருக்கக்கூடாதுனு எதிர்பார்ப்பு. சொத்து பிரிச்சா, நமக்கு எவ்ளோ தேறும்னு நினைக்கறது ஒரு எதிர்பார்ப்பு. முடியாம படுத்துட்டா, எப்படா சாகப்போறம்னு எதிர்பார்ப்பு, அந்த நொடி வரப்போ சாக கூடாது நான் வாழனும் எதிர்பார்ப்பு. செத்து போனா கூட, இவங்க திரும்ப இதே வீட்டுல பொறக்கணும் ஆசை படறது கூட ஒரு எதிர்பார்ப்பு. செத்து போனா ஆவி கூட, சாந்தி அடையனும் எதிர்பார்ப்பு, அந்த ஆவி மேல் லோகத்துல போய், எப்ப நான் திரும்ப பொறப்பேன் கேக்கறது கூட ஒரு எதிர்பார்ப்பு.. 

ஆக மொத்தம், பிறந்தாலும் எதிர்பார்ப்பு, வாழ்ந்தாலும் எதிர்பார்ப்பு, இறந்தாலும் எதிர்பார்ப்பு. இறந்த பிறகும் எதிர்பார்ப்பு.

வாழ்க்கையோட ஸ்வரசாயமே, அடுத்த நொடி எண்ண தெரியாம, எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கறது, ஆனா, யாரவது கேட்டா, நான் எதிர்பார்கலையே அப்படி சொல்லி, எதிர்பார்க்கறது தான்..

எதிர்பார்த்து கிட்டே இருந்தா, எதுவும் நடக்காது. எதிர்பார்க்காமலே இருந்தாலும் நடக்கறது நிறுத்த முடியாது. அதனால, நாம நம்ம வேலைய உண்மையா, எதிர்பார்ப்போட செஞ்சுக்கிட்டே இருப்போம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம.

எதிர்பாராததை எதிர்பாருங்கள், அது தான் வாழ்க்கை.

இப்போ இதை எழுதறது கூட ஒரு எதிர்பார்ப்போட தான்..

Expectation is a fuel for life 

எதிர்பார்த்த எழுத்துக்களும், எதிர்பாராத கற்பனையும்,
கல்யாணராமன் நாகராஜன் 

Add Your Comments

Say Something

 

Comments

from Sivaraj Parameswaran at 2021-09-15 00:15:29

Kalyan day by day your writing is becoming more philosophical! You have become a master in writing! Keep on writing Kalyan! Very soon you will become an inspirational writer! Who knows a future director as well! Rock on Kalyan 🤘