ஒரு ஞானம்
By Admin - 12 Jan 2025 111 0


உறுத்தல் என்பது வலியின் முடிவல்ல,
வலிதாண்டி வரும் வழியின் சிந்தனை...
புல்மேல் பிறந்த பனித்துளியின் முடிவு,
புல்லுக்கும், காற்றுக்கும் உறுத்தல் அல்ல...
கதிரவன் தரும் ஒளி அனுபவம்.
உறுத்தலில் மிஞ்சுவது அனுபவம்,
அது காலம் கடந்தாலும் அந்த உரையாடல்
தீராமல் காதுக்குள் ஒலிக்கும்...
சிறுவர்கள் விளையாடுவதை காண,
மேகத்தில் ஒளிந்துகொண்ட சூரியனுக்கும் உண்டு ஞானம்.
சொல்லாத காதலும், சொல்லிய காதலும்
சேராமல், எங்கோ ஒன்று சேர்ந்தவர்களுக்கும்
அருகே அமரும் அனுபவத்தின் பிறப்பாய் ஒரு உறவு...
பேசவில்லை, தலைசாயவில்லை, கை கோர்க்கவில்லை,
"வாழ்ந்து விட்டோம்" என்று பிரிந்த விழிகள் சொன்ன
வார்த்தையில் ஒரு ஞானம்...
வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்,வறண்டால் போகிறார்கள்,
இறந்தால் அழுகிறார்கள், மறுநாள் மறக்கிறார்கள்...
ஆயிரம் பேசினாலும், வலியால் வரும்
வழியே என்றுமே ஒரு அனுபவம்...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories

21 Apr 2023
பார்த்த முகம் - ஒரு ஹைக்கூ...
மினுமினுக்கும் விளக்குவேகமாய் பூச்சிகள்குரைக்கும் நாய்கள்சிதறும் கூட்டங்கள்ரத்தத்தின் வாசம்தினம் பார்த்த முகம்வீட்டின் சுவற்றில்.....

03 Mar 2024
துகள்
உன்னில் இருக்கும் அனைத்தையும் - நீ;உதறிவிட்டால்..எஞ்சுவது எதுவோ,அதுவே நீ !!!ஒரு சிறு துகள்.....
28 Mar 2020
நல்ல நண்பன் வேண்டுமென்று...
தனெக்கென்ன வாழாமல்பிறர்க்கென்ன வாழும்நண்பனே!உன்னைப் போலவே,யாருமில்லையே...நிழலென நீயும் வருவாயே,விழ எழக் கையொன்று தந்தாயே;விழிகளிலே நீர் வந்தாலும்,துடை...