ஒற்றை பார்வை தீண்டலில்

11 Jul 2020 Admin

ஒற்றை பார்வை தீண்டலில்,
என்னை என்ன செய்தாயோ,
சின்னஞ்சிறு குறுநகையில்,
புதுமொழி ஒன்றை தந்தாயோ..
அன்பே, எனதுயிரே,
நானாக நானில்லையே,
உன்னை கண்டதும்,
தாய்மொழி துணையில்லையே...

உன்னை நானும் எவ்வழி கண்டேன்,
உயிரில் நீயும் கலந்தாய் பெண்ணே,
அழகாய் உந்தன் மொழிகளை கேட்க,
ஆயுள் நீள வரம் கேட்டேனே..
வாழும் சொர்க்கம் எதுவென்று,
உன்னருகில் நானும் கண்டேனடி,
அடியே, மழையே,
என்னுளே துளியாய் நீயும்,
சென்றாயடி..
அழகே, மலரே,
சிறு வாசம் நீயும்,
தந்தாயடி...

உந்தன் தேடும் விழிகள் - என்னை 
கண்டால் அன்பே போதும்
எந்தன் நெஞ்சிலுள்ளே - உனது 
கனவுகள் எல்லாம் உயிர் பெறும்

உன் விழிகள் பேசும், 
கதைகள்  எல்லாம்,
நானறிவேன்.
நீ சொல்லாமல் சொன்ன, 
வார்த்தையும் - இங்கே
உயிர்ந்தெழும்..