ஓடி வா முருகா

By Admin - 04 Aug 2021 657 0

ஆறுமுகனே, அய்யனே
ஓடி வா செய்யோனே..
மஹாசேனா, மகேசன் சேனா,
கூட வா கந்தனே...
ஓடி வா முகனே..
தேடி தேடி, 
அருள் பெற,
கண்டேன் 
உன்னையே,
நீயே - குகனே,
என்றும் துணையே;
முருகனே வா வா,
என் பாலனே வா..

அழகும் நீயே,
வீரமும் நீயே,
திருநீறும் நீயே,
திருவருளும் நீயே,
என் முருகனே,
ஓடி வா என் பாலனே..
தேனின் சுவையும்,
பாலின் நிறமும்,
உலகின் பொருளும்
நீயே - என் வேலனே
வா என் குறை தீர்க்கவே.

ஈசன் மகனே,
மயில் வாகனனே,
ஆறு தலைகொண்ட,
அறுபடையப்பனே,
முருகனே ஓடி வா - என்
அப்பனே...
ஆதி அங்கம் கலந்து,
ஆதாரமாய் வந்தவனே,
மலைகளிலும் - நீரிலும்
கலந்திருப்பவனே - என்
சித்தனே - நீயே - முருகனே
ஓடி வா கந்தனே..

சிந்தனையில் உருவாகி,
நித்திரையில் உறவாடி,
உருவிலே கருவான
உறவே என் முருகனே..
அல்லல் தீர்க்கும்,
நல்லை செய்யும் - மகனே
என் அழகனே ஓடி வா,
என்னோடு சேரவா - முருகா..
வாழும் நொடிகள்,
கர்ம வினைகள் - தீர்க்க
கரம் தர ஓடி வா முருகா,
செய்த வினைகள் தீர,
அறியாத குறைகள் போக,
கருணை கொண்டு வா முருகா,
உன்னோடு சேரவா முருகா..

Add Your Comments

Say Something

 

Comments

No comments.