கடல் அலை....

11 Jul 2020 Admin

நீரும் ஒரு அன்னைதான்
ஆறுதல் சொல்ல,
கட்டித்தழுவ,
தனிமையில் - நிழல்
துணைக்கூட யில்லாமல்,
கால்கள் தனியே 
நடை பழகும்போது,
மணல் வாசனையில்,
தீண்டும் தென்றலாய்,
அந்த கடலோரத்தில்,
குழந்தைபோல் - துள்ளி 
வரும் அலைகள்,
கால்களை தொடும்
வினாடி உணர்தேன்,
கடல் நீரும் அன்னை தான்,
அன்பு - புரிவதில் 
அல்ல,
உணர்வதில்..