கடவுளை தேடி !!!

By Admin - 04 Feb 2020 511 0

விழியுண்டு, வழியுண்டு, 
காணாத கண் கொண்டு !!! 
நின்னை தேடா - எங்கும்,
தேடல் தொடர்ந்திட...

நித்தம் தோன்றும்; 
பெயரெல்லாம் 
உன்னை அழைத்திட, 
சிந்தையில் தோன்றும்; 
உருவமெல்லாம் 
படைத்திட, எங்கோ தேடி;
இங்கே தஞ்சம் புகுந்திட,
ஆயிரம் விழிகொண்டு 
உன்னை காணவில்லை, 
சத மானுடர்க்குக் 
புலப்படவில்லை..

சிதறிய துகள் கற்கள்; 
எங்கோ சிதறிட, 
அதினுள் - ஒரு 
கலையாய் உருவெடுக்க, 
பல புரியாத பரி பாஷைகள் 
உனக்காக எழுதிட,
அர்த்தம் ஏதும் அறியா, 
தெரிந்த மொழியில்
உன்னை அழைத்திட, 
மலைகளிலும், 
நீர்களிலும் மூழ்கி, 
உன்னை தேடிட, 

பல ஆயிரம் 
ஆண்டுகள் தாண்டியும், 
தேடல் தீராமல் - உன்னை 
உணர மட்டுமே 
முடிந்த எனக்கு, 
பெயர் ஒன்று 
தேடி சென்றேன்....
தோன்றும் பெயர்கள், - பல 
கலகம் உண்டாகிட, 
கருணை நீட்டும் 
கரங்கள் முன்னே, 
உன்னை கடவுள் 
என்ற மத்தியில், 

அன்பு ,
என்ற சொல் புழங்கிட,
கனா கண்டேன் !!!

Add Your Comments

Say Something

 

Comments

No comments.