கண்கள் நீயே...

27 Jun 2020 Admin

கண்கள் நீயே,
காதலும் நீயே,
என் விழிகளில் வழியும் 
ஜீவனும் நீயே...

உயிரும் நீயே,
உறவும் நீயே,
என் உதிரத்தில் கலந்த
உருவமும் நீயே...

அடி..
வாழ்கின்ற நொடியே
உனக்காகத்தானடி - நொடிநேர
துயிலாய் வந்து போகாதடி...
கனவே, கனவே கலையாதே,
அவளை கட்டி அணைத்த 
நொடிகளை அழிக்காதே.

அடி, 
மாயாவியே,
புது உலகத்தை உன்னால் பார்க்கிறேன்,
உன் புன்னகையில் ஏனோ மீண்டும் பிறக்கிறேன்...
 
நீராகியே, 
காணலாய் இங்கே கரைகிறேன், 
உன் கை பிடிக்க நானும் வருகிறேன், 
அந்த வரம் ஒன்று கிடைத்தால்,
நொடியே மீண்டும் உயிர்த்தெழுவேன்...

உந்தன் தேடும் விழிகள் - என்னை 
கண்டால் அன்பே போதும்...
எந்தன் நெஞ்சிலுள்ளே - உனது 
கனவுகள் எல்லாம் உயிர் பெறும்..

உன் விழிகள் பேசும், 
நாடகம் எல்லாம்,
என்னுள்ளே நானறிவேன் - நீ 
சொல்லாமல் சொன்ன, 
காதல் கதைகளும் - இங்கே
உயிர்ந்தெழும்..