கண் திறந்தால்

11 Jul 2020 Admin

இருண்டு கிடக்கும் வாழ்வில்
கண்களை மூடிக்கொண்டு, 
சுற்றும் பதறுகளே...
சற்றே - கண் திறந்தால் 
அதன் ஒளி தரும் 
பல வண்ணம்

தனிமை யென்பது, 
ஒடுக்கப்பட்ட சிந்தனையல்ல,
அது - வாழ்வின் 
கலைக்கூடம்

நீ 
எழுவதும், 
அழுவதும்,
ஒன்றாய் படைக்கப்படும்,
காவியம்

உன்னை - நீ அறிவது 
கூட்டத்தில் அல்ல,
தனிமையில்

துன்பத்தை கண்டு 
சோர்வடையவில்லை - அது 
சோர்வடையும்வரை
ஓயப்போவதில்லை

உன் 
போராட்டம்..
புதிதல்ல,
தொடக்கமல்ல,
முடிவுமல்ல..
ஒன்றாய் பின்னிப்படர்ந்த,
உறவுகள்

உதிரத்தில் கலந்த,
பல வண்ணங்கள்,
வாழ்வியல்

இதன்
வெற்றி,
கதை,
பாதை,
அனைத்தும் காவியமாய்,
அழகான காட்சியாய்,
அதை உணராமல்,
ஏனோ நிற்க நிர்கதியாய்,
காரணம் - அனைத்தும் 
பிண்டம் முன்பே