காதல் கொண்டேனே.....

By Admin - 16 May 2020 480 0

அழகான மாலை நேரம்,
அலைபாயும் என் மனம்,
நின்னை கண்டதும் - காதல்
கொண்டேனே; நானும்
காதல் கொண்டேனே..

விழியாலே பேசும்,
நாடகங்கள் நானறிவேன்,
கனவிலும் தோழியே,
காற்றை போல் உரசிட,
கனா கண்டேனே - நானும்;
கனா கண்டேனே....

ஒரு நானப்புன்னகை,
கரையுதே என் ஜீவனும் - ஒரு
வார்த்தை சொல்ல,
மொழியும் மறந்ததே..
தேடி தேடி - தேயிந்து போனேன்,
காணாமல் ஓய்ந்து போனேன்..

என்னருகில் நீ செல்ல,
உயிரின் வேகம் கூடுதே,
மௌனமாய் - விழியிலே பார்த்த
பொழுது - வாழ நாட்கள்
ஏங்குதே...

வானம் போலே - என் மனம்
உனக்காக பொழியுதே,
மழை போலே நானும் - உன்னை
அணைக்க வழியுதே..
இமை போலே - நானும்
காதல் உள்ளே வைத்தேன்,
கலையாதிருக்க - காவலாய்
நானிருப்பேன்...

நொடி நேரம் நீயும் - மடி மீது
சாய்ந்திட - ஏனோ மீண்டும்
பிறக்கிறேன் உன்னாலே..
இது தான் காதல் என்று கண்டேன்
தன்னாலே - நானும் காதல் கொண்டேனே,
உன் மேல் - ஏனோ..
நானும்
காதல் கொண்டேனே..



- Kalyan

Add Your Comments

Say Something

 

Comments

No comments.