காற்றாய் நானும் கரைந்தேனே

11 Jul 2020 Admin

என் கனவினில், கனவினில்
வந்து வந்து செல்கிறாய்
உன் நினைவுகள் - என்னை
தேடி தேடி கொல்லுதே

உன் கரு விழிகள் - என்னை 
கண்டதும் இதயம் களவு போனதே, 
நீ என்னை - கடந்து செல்கையில் 
உலகம் மறந்து போனதே..

நம் இதயங்கள் பேசிட, 
பரி பாஷை ஒன்றும் இல்லையே...
விழிகள் இரண்டும், தடம் மாறிட 
வழிகள் ஏதும் இல்லையே

கண்களின் ஓரமாய், 
காதல் வந்த செல்ல...
செல்லமாய் உன்னை அழைத்திட,
வார்த்தை போதவில்லையே

இமைகளின் சிமிட்டலில், 
நானும் கரைந்து போக
காற்றிலே உன் கூந்தலும்
என்னை கடத்தி செல்ல

தேடினேன் தேடினேன், 
யாரடி என் காதலி - நீ 
வந்ததும், கரைந்ததே 
என் உயிர் துளிகளே

உன்னிடம் பேசிட,
நூறு கதைகள் உண்டு
அதை சொல்லிட, 
கட்டிவைத்தேன் இரவையும்

உன் தோளிலே 
நான் உறங்கிட,
தென்றல் என்னை தீண்டுதே
அது சென்ற தடயம் - உந்தன் 
வாசம் வீசி போகுதே

உன்னை நான் சேர்ந்திட,
நாட்கள் தூரம் இல்லையே
அதுவரை காத்திருக்க,
என் நேரத்திற்கு 
பொறுமை இல்லையே

என்னை நீ கண்டதும் - காற்றில் 
என் விரல்கள் உன்னை தீண்டுதே
உன் சுவாசம் என்னை உரசிட,
காற்றாய் நானும் கரைந்தேனே..