டும் டும் பீப்பீ....

By Admin - 10 Nov 2020 567 0

கல்யாணம்..25, 27 வயசுல ஒரு ப்ரஹ்மச்சாரிய லேசா பயமுறுத்தி, அதிகமாபதட்ட படுத்தி, கொஞ்சமா ஷாக் அடிக்கற வைக்கற வார்த்தை, சாதாரண ஷாக் இல்லைங்க,Life Time கார்டு மாதிரி, Life Time ஷாக்...

அப்படி என்னதான் இருக்கு, இந்த கல்யாணத்துல..

முதல் நல்லா, போயிட்டுயிருக்கற Life-ல, திடிர்னு ஒரு நாள் பொண்டாட்டிங்கற பேர்ல, வீட்டுக்குள்ள வருவாங்க, பின்னாடியே சொந்தம் சொல்லிட்டு ஒரு கும்பல் வரும்.. நாம என்னமோ, LKG போற ஸ்கூல் பையன் மாதிரி, எல்லாம் அட்வைஸ்-கும் தலையை நல்ல ஆட்டனும், இல்ல முத நாளே, செல்ல சண்டையில ஆரம்பிச்சு, அது வேற level வரைக்கும் போகும்.. ஆன, எந்த மாதிரி சண்டை வந்தாலும், இறுதி முடிவு ஒண்ணுதாங்க, யார் தப்பு பண்ணாலும், நாமதான் sorry சொல்லணும்.. முக்கியமா, பீரோக்குல்ல இருக்கற உங்க துணி அப்படியே take diversion ஆகி பக்கத்து state-க்கு போனாலும் ஆச்சர்யமில்ல, அடுத்து பாத்ரூம்-ல கூட அவங்களோட சோப்பு, ப்ருஷ்கூட உங்க இடத்தை பிடிச்சுரும்...

கல்யாண லீவு-ல நாம ஏதோ பெருசா சாதிச்ச மாறி, ஆபீஸ் கிளம்புவோம், இதுவரைக்கும் இல்லாத உலக மகா romance அங்க தான் start ஆகும்..நம்ம bike start பண்ணிட்டு, லைட்-ஆ அந்த side mirror ல சின்னதா ஒரு வெக்கம், சிரிப்பு எல்லாமே வரும், எதுக்குடா ஆபீஸ் போகணும் thought ல வரும்..அப்படியே, அவங்க கிட்ட வந்து சீக்கிரமா வீட்டுக்கு வாங்கனு, காது கிட்ட மூச்சு விட்டுக்கிட்டே சொல்லுவாங்க, ஊர்ல எந்த பொன்னும் கண்டுக்காத நம்மள,இந்த பொண்ணுக்கு போய் இவ்ளோ பிடிச்சுயிருக்கே..கொஞ்சம் யோசிச்சி பார்த்தா; நடு ராத்திரி தாண்டி, விடிஞ்சு வீட்டுக்கு வரப்போ, ஏன்டா late  அப்டின்னு அப்பா, அம்மா யாராவது கேட்டா, இதுவே late-ஆ அப்டின்னு நக்கல் பன்னிட்டு போவோம், இன்னும் சில பேர் இருக்காங்க, அதுக்கு பதில் கூட சொல்ல மாட்டாங்க..  ஆனா, கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்-ல நாமளும் வழியறது தெரியாம, daily -யும் சீக்கிரமா வருவோம் வீட்டுக்கு, அப்போ வீட்டுல இருக்கறவங்க, ஒரு look விடுவாங்க பாருங்க, அங்க குனிஞ்ச தல, 10 வருஷம் ஆகி தூக்குல அதாவது தலைய..

இது தாங்க நாம அடிமையாகுதலின், முதல் கட்டம்..

அப்புறம், என்னங்க உங்க அடிமையாகுதலின் வேலைகள், கனஜோரா நடக்கும்..இதுக்கு, அவங்க கூட படிச்சவங்க எல்லாம் வேற ரூம் போட்டு ஐடியா தருவாங்க...

காலையில 10 மணிக்கு எந்திரிச்சு, அரக்க பரக்க குளிச்சுட்டு, என்ன சாப்பிட்டோம் அப்டின்னு கூட தெரியாம, வேகமா கிளம்பி, 11 மணிக்கு யெல்லாம், office-க்கு போகணும், ஆனா இப்போ, அவங்க கூடவே எந்திரிக்கணும், ஒரு டம்ளர் நகத்து கூட முடியாம சீன் போடா எல்லாரும், அவங்க செய்யுற எல்லாம் வேலைக்கும், நாம உதவி பண்ணனும்..கடைக்கு போறது-லந்து, பாத்ரூம் கழுவற வரைக்கும், கிட்ட தட்ட சொல்ல போன, வீட்டுல நாம ஒரு All Rounder மாதிரி.. Night Life-ல இருந்த நமக்கு, life-ஏ night  மாதிரி ஆயிடும்...25 வருஷமா அம்மாக்கு உதவி பண்ணாத நாம, நேத்து வீட்டுக்கு வந்த பொண்ணுக்கு, விழுந்து விழுந்து ஏன் இப்படி வேலை செய்யறான், சரியான பொண்டாட்டிதாசன் அப்டின்னு பேரு வேற...எனக்கும் அந்த, சந்தேகம் இருக்குங்க, நாம ஏன் இப்படி அவங்களுக்காக விழுந்து விழுந்து வேலை செய்யறோம்..முடியாது, அப்டின்னு ஒரு வார்த்தை இருக்றதே மறந்து போகுதே.. அது மட்டும் ஏன் ?

அடுத்த கட்ட சேவைகள், automatic -ஆ ஆரம்பம் ஆகும், 

இதுக்கு முன்னாடி வேலைக்கு போறா பொண்ணா இருந்தா, நடந்து போய் ஆட்டோ, cab , பஸ்-ல போனவங்க, இப்போ full time pickup & drop பண்ற சம்பளம் வாங்காத ஒரே டிரைவர் நாம தான்.. சாயங்காலம், அவங்க வரத்துக்கு முன்னாடியே நாம் போய் attendance போடுவோம், கொஞ்சம் லேட்டா போனாலும், இது வரைக்கும் life -ல எதுக்குமே wait பண்ணாத மாறி, திட்டுனா வார்த்தையே திரும்ப திரும்ப திட்டுவாங்க.. ஆனா, starting -ல அவங்களும் திட்ட மாட்டாங்க, நாமளும் late -ஆ போக மாட்டோம்.. அப்போ, நாட்கள் போக போக, ஏன் சண்டை வரது, ஏன் அவங்க கேக்கற time தர முடில.. உண்மையாவே முடியலையா, இல்ல போதும்டா சாமீ உன்னோட முடியலையா..எது உண்மைன்னு தெரியல.. ஆனா ஒரு உண்மை, எல்லா மனைவியும் அவங்க பிரச்சனைக்கு வக்கீலாகவும், நம்ம பிரச்சனைக்கு நீதிபதியாவும் ஆயிடறாங்க..இதுல கசப்பான உண்மையென்னனா, அவங்க இருந்தாலும் பிரிச்சனை, இல்லனாலும் பிரிச்சனை..

அதுவும், முதல் தடவ போன்-ல பேசற மாறியே பேசுவாங்க, சாப்டாச்சா, என்ன பண்றீங்க, அவங்க என்ன பண்றங்க, வீட்டுல பேசவே மாட்டாங்க, ஏன்னா, போன்-ல குடும்ப நடத்தற மாதிரி ஆகி போச்சே, ஊருல இருக்கற கதை, உங்க அம்மா என்ன பன்றாங்க தெரியுமா ஆரம்பிச்சு, எங்க கொள்ளு தாத்தா  வரைக்கும் ஒரு round போய்டுவாங்க, நம்ம சொல்ல வேண்டிய ஒரே வார்த்தை "ம்ம்ம்" "ம்ம்ம்ம்" , கடைசில போன்-ல பேசி time waste பண்ணாதீங்க, வேலைய பாருங்க சொல்லிட்டு போன்-ஆ வெச்சிட்டு போயிட்டே இருப்பாங்க.. 200rs mobile பில் கட்டின நாம, இப்போ 1000rs 2000rs கட்டனும்.. அவங்க சம்பாதிக்கிற எல்லாமே savings , நாம சம்பாதிக்கிற எல்லாமே expense ..எல்லாமே பன்னிட்டு, கடைசில உங்களால ஒரு 1rs save பண்ண முடியுதான்னு, கேக்கறப்போ நேர தலையை கொண்டு போய் செவுத்துல முட்டுனு போல இருக்கோம், நம்ம தலையை.கல்யாணம் பண்ணுவியா,  கல்யாணம் பண்ணுவியா,  அப்டினு கேட்டுக்கிட்டே...திருப்பி கேள்வி கேட்டா, அடுத்த வேலை சோறு போச்சே, அப்பறோம் ஸ்விக்கி, uber eats pay பண்றதுக்கு, வாய் மூடிக்கிட்டு எப்போதும் போல, சிரிச்சுகிட்டே, மனசுக்குள்ள எனக்கு ஒரு நாள் வரும்டி, சொல்லிட்டே போகணும்..அது ஜென்மத்துக்கு அந்த நாள் வராது..நம்பிக்கை தான...

கேள்வியே இல்லாத நம்ம வாழ்க்கையில, கேள்வியே வாழ்க்கை ஆயிடும்..

அவங்க எதுவும் சொல்லமாட்டாங்க, நம்மதான், அவங்களுக்கு புடிச்சது என்னனு கண்டுபிடிச்சு அத வாங்கி தரணும்.. முக்கியமா பொய் சொல்லக்கூடாது, அப்படியே சொன்னாலும் அது பொய் மாதிரி காட்டிக்க கூடாது.. எல்லார் வீட்டுலயும் ஒரு ஆஸ்கார் நாயகன் கண்டிப்பா இருப்பாங்க..
மத்த பொன்னு கிட்ட பேச கூடாது தேவையில்லாம, ஆனா பசங்க ராசி அப்படி, கல்யாணம் அப்பறம் தான், நாம பாக்கற பொண்ணு எல்லாமே அழகா தெரியும்.. அப்பறம், யார் அந்த பொண்ணு, எப்படி தெரியும், எப்போலேர்ந்து தெரியும், எது மூலமா தெரியும், என்கிட்ட ஏன் சொல்லவேயில்லை, எல்லா கேள்வியும் வரும்..கேள்வி கேட்டே ஒரு மனுஷன கொல்றது இதுதான்..

இதுல என்ன கொடுமைனா, Customer  care recording voice press 1, press  2 , கேட்டு நாம போன் பேசினா, அதுவே உலக மகா கொடுமை, அதுக்கும் மேல இவங்க வேற, நான் சொல்ற எதுவும் கேக்கறது இல்ல, போன்-ல சிரிச்சுகிட்டே recorder வாய்ஸ்-ல வர பொண்ணா கூட விடறதுல்ல திட்டு வேற...அது recording voice தெரிஞ்சும் கேள்வி கேப்பாங்க, அப்போ வரும் பாருங்க ஒரு கோவம், நேர kitchen -ல போய் அவங்க கிட்ட, என்ன இப்படி கேள்வி கேட்டே கொல்றியே, படிக்கற அப்போ ஒழுங்கா கேள்வி கேட்ருந்தா, உன் மண்டைல மூளை கொஞ்சமாது வளர்ந்து இருக்குமே, நான் ஒரு இளிச்சவாய இருக்கறதால, உங்க மூளை சூப்பரா வேலை செய்யுது...இப்படி எதுவுமே கேட்காம, பேசாம வீட்டை விட்டு வெளிய போயிட்டே இருப்போம்...

அடிக்கடி வெளியில கூட்டிட்டு போகணும் தோணும், அதுக்கு ஏற்ற மாதிரி எல்லா வேலையும், கணஜோரா நடக்கும். இப்படிதான் ஒரு நாள் வெளியில கூட்டிட்டு போனோம் வையுங்க, கடந்த 10-15 வருஷமா வாங்க நினைச்சுதெல்லாம், list போட்டு mind ல ரெடியா வெச்சுயிருப்பாங்க, அவங்க வாங்குற nail polish-கும், body spray -கும், நாம தான் மொய் எழுதணும். Office-la அடுத்தவன் கை புடிச்சு, கால புடிச்சு நாம கஷ்டபட்டு தூங்காம சம்பாதிச்ச எல்லாத்தையும், நமக்கு எதுவுமே பண்ணாம, பெரிய நாமம் போட்டுக்குவோம்.. அவங்களோட எல்லா சிணுங்கலுக்கும் , Credit Card கிழிய  கிழிய  தேய் தேய்னு தேய்ப்போம்.. Bill எகிறுத அது பாத்து, மனசு பதறினாலும், உதடு வேற என்ன சொல்லும், எல்லாமே என்னோட செல்லக்குட்டிக்கு தான் தோணும் ...

அதுக்கு அப்பறம், எங்க சார் உங்க வாழ்க்கை,
full time அடிமை சார் நீங்க...

Friends room-ல விடிய விடிய கதையடிச்சுட்டு பேசற சுகம், இப்போ வெறும் கனவை மட்டும் இருக்கும்... எங்க போறோம், எதுக்கு போறோம், எதை நோக்கி  வாழ்க்கையில ஓடறோம் தெரியாம, எங்கெங்கேயோ போன அழகிய தருணங்கள், மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டும் இருக்கும் . எந்த அழகான பொன்ன பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்படி இருப்பாளோ, அப்படி இருப்பாளோ, அந்த எதிர்பார்ப்பு சுத்தமா இருக்காது..

நமக்கு நாமே விபூதி அடிச்சுக்கறது பேருதான் "கல்யாணம்"

ஆனா, மேல சொல்றது எல்லாமே, உண்மைகள் சில இருந்தாலும், bachelor  life வாழறவனுக்கு கல்யாண life -ல போகணும் ஆசை, இங்க இருக்கறவனுக்கு, அங்க போகணும் ஆசை.. ஆனா, வாசல் தோறும் வேதனையும் இருக்கும், சந்தோஷும் இருக்கும்...அதை பாக்கற பார்வையிலும், நாம பண்ற adjustment -ல சூப்பர் லைப் இருக்குங்க...இவங்களும் மாற மாட்டாங்க, நாமளும் மாற மாட்டோம்...

நமக்கு என்னதான் ஆயிரம் கோபம், பிரச்சனை, சந்தோஷம் இருந்தாலும்.. Wife அப்பிடிக்கறவங்க, நம்ம life-ல கிடைச்ச ஒரு magic . நம்ப blood group  என்னவேனா இருக்கலாம், அந்த குரூப்க்கு அர்த்தம் தரவங்களே அவங்கதான்..எத்தனையோ function போவோம்,வருவோம் யாருமே கண்டுக்காத நம்மள, ஏன் invitation கூட தரமாட்டாங்க, but wife-life -ல என்னைக்கு வந்தாங்களோ, bachelor அந்தஸ்து family man அப்டின்னு மாறிடும்..

இந்த ஜென்மத்துல, நாம இவ்ளோ பெரிய இடத்துக்கு போனாலும், மாறாத ஒரு அழகான designation Husband & wife . 

அன்பு, அழகான மாய சொல், நாம வாழற இடத்தை சொர்க்கமா மாத்தக்கூடிய சக்தி இதுக்கு மட்டும் தான் இருக்கு.. அதுவும் ஒரு பொண்ணுக்கு மட்டும் தான் இருக்கு... 

அன்பு பழுகுவோம்.. தனியா இல்லங்க.. டும் டும் பீப்பீ யோட...

நீங்க என்ன நினைக்கறீங்க ?

"என்னங்க, அங்க அடுப்புல பால் வெச்சுயிருக்கேன்,
வெட்டியா அங்க யார்கிட்ட பேசுறீங்க,
போய் வேலைய பாருங்க,
பால் பொங்கிட போகுது"

சேரிடா செல்லம்.. தொடரும்....

அன்பு பழுகுவோம்,
- கல்யாண் நாகராஜன்

Add Your Comments

Say Something

 

Comments

No comments.