நண்பா நீ போராடு !!!

16 Oct 2020 Admin

நண்பா நீ போராடு !!!

விழுந்தால் அழாதே,
அழுதால் துடிக்காதே,
நிழலும்; துணையின்றி போகும்..

ஜனனமும் புதியது,
மரணமும் பழையது,
இடைவேளையில் - சிறு பயணம்;
அது முடியும் வரை போராடு..

நேரங்கள், காலங்கள்
கூடி வருமா - உன் மதியை
கொண்டு விதியை 
உடைத்திட போராடு

தினம் புது நாடகம்,
பல அறியா வேஷம்,
சூழ்நிலை மாறும்,
அது தரும் புது பரிமாணம்;

நொடிநேர துயலாய், 
உறங்கிவிட்டாலும்,
கனவுகளை நீ காத்திடு,
விடியும் நேரத்தில்,
அது தொடர்ந்தால்,
விடியலை நீ கண்டாய்,
அது வரை போராடு...

வானம் இருக்குது,
பூமியும் இருக்குது,
எழுந்து வா தோழா..
யாரென்ன;
வந்தார்கள்,
சொன்னார்கள் ,
உன்னையன்றி யாரும்;
உன்னையறிவதில்லை,
தேடல்கள் தீராமல்,
ஓய்வும் இல்லாது.. 

சிறகாய் பறந்திடு,
அந்த வானம்,
வசப்படும் தோழா !!!