நந்துவும், நந்திதாவும்

By Admin - 10 Feb 2022 384 0

காலை 6 மணி..

அலாரம் சத்தம்..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று அடித்து கொண்டு இருக்க..

மணி 6 ஆச்சு, சீக்கிரம் எந்திரி நந்து.. ஸ்கூலுக்கு டைம் ஆகுது. பஸ் வந்துடும், விடிய விடிய மொபைல் கேம்ஸ் விளையாடிட்டு, எவ்ளோ நேரம் தூங்குவ..எந்திரிக்கிறியா, இல்லையா..

புலம்பி கொண்டே நந்து அம்மா செல்ல.. 

சினுங்கிகொண்டே நந்து எந்திரிச்சு, மெதுவாக ஸ்கூலுக்கு கிளம்ப கொண்டிருந்தான்.

நந்து அம்மாவோ, நந்துக்கு ஸ்கூல் டிரஸ் எடுத்து வச்சுட்டு, கிச்சன்ல, breakfast ரெடி பண்ணிட்டு, lunch பேக் பண்ணிட்டு பிஸியா இருக்க..மெதுவாக நந்து வின் அப்பா, அப்பொழுதுதான் நெளிந்து கொண்டே எந்திரிச்சு வெளியே வர.. குட் மார்னிங் நந்து.. குட் மார்னிங் குட் மார்னிங் டாடி.. என்று சொல்லிக்கொண்டே, அம்மா தந்த இட்லி சாப்பிட்டு கொண்டு இருந்தான்.. அதேசமயம், ஸ்கூல் பஸ் horn சத்தம் கேட்டதும், நந்துக்கு சாக்ஸ், ஷூ மாட்டிவிட்டு, வேகமாக நந்துவின் அப்பா நந்துவை, தூக்கி கொண்டு போனார்.. பின்னாடியே, நந்துவின் அம்மா, ஸ்கூல் bag, லஞ்ச் bag ரெண்டையும், மறந்துட்டு போறீங்க என்று வேகமா ஓடி வந்து, பெருமூச்சு விட்டு கொண்டே, தந்தவுடன்..

இருவரும் bye bye சொல்லிவிட்டு, சென்றதும்.. பஸ் கிளம்பியது.. பெரு மூச்சு விட்டு கொண்டே..அப்பாடா என்று சொல்லிக்கொண்டே, தனது வீட்டின் சோபாவில் அமர்ந்து காபி சாப்பிட்டு கொண்டே, கொஞ்சம் கொஞ்சலும், சிணுங்கும் காதலோடு, அந்த நாள் தொடர்கிறது...

மறுபுறம்,

அதே காலை 6 மணி..

நந்திதா, தன் அப்பாவின் மேலே தூங்கி கொண்டுயிருந்தாள், நந்திதாவின் அம்மா..ஸ்கூலுக்கு டைம் ஆச்சு, அப்பாவும், பொன்னும், எவ்ளோ நேரம் தூங்குவீங்க.. என்று சொல்லி கொண்டே தானும், அருகில் வந்து படுத்து கொள்ள, மூவரும் தலையணையில் விளையாடி கொண்டே, கிச்சு கிச்சு மூட்டி கொண்டு, மெதுவாக bed லிருந்து எழுந்து, நந்திதாவின் அப்பா, நந்திதாவையும், அம்மாவையும் முத்தமிட்டு, பாத்ரூம் செல்ல, பின்னாடியே நந்திதாவும் வேகமாக சென்று, ஸ்கூலுக்கு செல்ல தயாரானாள். அம்மாவோ, கிச்சனுக்கு சென்று, அப்பாவுக்கு காபியும், நந்திதாவிற்கு டிபன் ரெடி செய்து கொண்டே, அவளின் uniform , bag , எல்லாத்தையும் எடுத்து வைத்து விட்டு, பாத்ரூம் கதவை தட்டி, நந்திதாவின் அப்பாவை எழுப்பி விட்டு, பின்னாடியே டிவியில் பாட்டு போட்டு கொண்டு, டான்ஸ் ஆடிக்கிட்டே ஸ்கூலுக்கு ரெடியாகி கொண்டு இருந்தால் நந்திதா.. அப்படியே அவளது breakfast முடிந்தது.. நந்திதாவின் அம்மா, நந்திதாவிடம், இங்க பாரு டா, இன்னிலேந்து புது ஸ்கூலுக்கு போற, பயப்படாத, ஜாலியா போ, நிறையா friends கிடைப்பாங்க, ஓகே..அப்பறம், கிளாஸ் தேடாத, அங்க போன உடனே, வாட்ச்மன் அங்கிள் இல்லாட்டி யாராவது miss கிட்ட கேளு சொல்லுவாங்க.. என்று பேசி கொண்டே, சாக்ஸ், ஷூ போடவும், ஸ்கூல் பஸ் horn சத்தம் கேட்டது. 

வேகமாக இருவரும் நந்திதாவை தூக்கி கொண்டு பஸ்ஸில் ஏற்றிவிட்டு, நந்திதா மறக்காம சாப்பிடு, மிச்சம் வரக்கூடாது, அப்படியே கொஞ்சம் கிளாஸ்ஸயும் கவனி என்று கொஞ்சி விட்டு, bye bye சொல்ல சொல்ல, பஸ் கிளம்பியது..

இருவரும், மெதுவாக கை கோர்த்து, வீட்டுக்கு சென்று மெதுவாக, சோபாவில் அமர்ந்து காபி சாப்பிட்டு கொண்டே, கொஞ்சம் கொஞ்சலும், சிணுங்கும் காதலோடு, அந்த நாள் தொடர்கிறது...

ஸ்கூல் பஸ் மெதுவாக ஸ்கூலுக்குள் வந்தவுடன்,

மெதுவாக எல்லோரும் இறங்கி கிளாஸ்க்குள் போன சில நொடிகளில், ஸ்கூல் பெல் அடிக்கிறது..

நந்திதா, வேகமாக அங்கும் இங்கும் ஓடி, கிளாஸ் ரூம் தேடும் போது, சட்டென்று நந்து மீது மோதியதில், இருவரும் கீழே விழுகிறார்கள், நந்திதா சட்டென்று எந்திரிச்சு, சாரி..நான் இந்த ஸ்கூலுக்கு புதுசு, 8th standard எங்க தெரியல, பெல் அடிச்சுட்டாங்க..அதன்..சாரி என்று சொல்ல.. நந்து, முதல கைகொடு, அப்புறம் பேசு.. என்று சொன்னதும், நந்திதா கை தருகிறாள், இருவரும் கை பிடித்ததும், மீண்டும் பெல் அடிக்கிறது...

நந்து, நந்திதாவிடம்..நானும் 8th standard தான், வா என்று சொல்லி இருவரும், முதல் தளத்தில் இருக்கும் கிளாஸ்க்குள் நுழைந்ததும், நந்து எல்லோரிடமும், இந்த பொண்ணு என்னோட friend இன்னிக்குத்தான் first day இந்த ஸ்கூலுக்கு வராங்க..என்று சொன்னதும், நந்திதா, friend ல இல்ல, இப்பதான் ரெண்டு பேரும் பார்த்தோம், கிளாஸ்க்கு வழி கேட்டேன் அவ்ளோதான் என்று சொன்னதும், நந்து முறைத்து கொண்டே..தனது கடைசி பெஞ்சில் போய் உட்கார்ந்தான். அவனது நண்பர்கள், என்னடா..செம தில் இந்த பொண்ணுக்கு. நந்துவேயே..சேரி விடு விடு.. என்று சொல்லி சிரித்து கொண்டு இருக்கும் பொழுது.. 

கிளாஸ் தொடங்குகிறது...

இன்னைக்கு யாருமா புதுசு..எந்திரிச்சு உங்கள பத்தி சொல்லுங்க..என்று சொன்னதும்..

நந்திதா, மெதுவாக எந்திரிச்சு.. சார், என் பெயர் நந்திதா, என்று சொன்னதும், நந்துக்கு அடக்க முடியாத சந்தோஷம், உதட்டோரம் சிரிப்பு..... நந்திதா, என்னோட அப்பா பெயர் நந்து என்று சொன்னதும், மொத்த கிளாஸ்சும் சிரித்து விட்டது.. ஒன்றுமே புரியாமல் அவள் நிற்க..

கிளாஸ் டீச்சர் அது ஒன்னும் இல்லாம, கடைசி பெஞ்சில் இருக்கான் பாரு அவன் பெயரும் நந்து, அவங்க அம்மா பெயர் நந்திதா...இங்க உன் பெயர் நந்திதா, உங்க அப்பா பெயர் நந்து.. இருவரும் ஒரு நொடி, பார்த்து கொண்டே, ஒன்னும் பேசாமல் அமர்ந்து கொள்ள...சேரி சேரி போதும்.. கிளாஸ்க்கு போலாம்.. என்று சொல்லி.. அந்த நாள் தொடங்கியது.. நேரம் கிடைக்கும் போது, நந்திதா மெதுவாக திரும்பி பார்க்க நந்து அவளையே பார்த்து கொண்டு இருந்தான் நந்து..இன்னிக்கு போன உடனே அப்பாகிட்ட சொல்லணும்.. இவனுக்கு போய், நம்ம அப்பா பெயர்.. அதே நேரத்தில், இன்னைக்கு வீடு போன உடனே, இதை அம்மாகிட்ட சொல்லணும், இவளுக்கு போய் அம்மா பெயர் என்று நந்துவும் நினைத்துக்கொண்டு இருந்தான்..

அந்த நாள் முடியும் பொழுது, கிளாஸ் டீச்சர், நாளைக்கு எல்லாரும் வரும் போது parents கூட்டிகிட்டு வாங்க, principal மேடம் பேசணும் சொன்னாங்க..

ஸ்கூல் கடைசி பெல் அடிக்கிறது.... நந்து, நந்திதா இருவரும் வேற வேற பஸ்சில் ஏறியதும், ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்து, சில நேரம் முறைத்தார்கள், பஸ் கிளம்பும் போதும், அவர்களை மறந்து சின்னதாய் ஒரு புன்னகை...

வீட்டுக்கு போனதும், நந்து தன் அம்மாவிடம் இன்று நடந்தை சொன்னதும், oh ! சூப்பர் டா நந்து.. ஆச்சர்யமா இருக்கு..அது எப்படிடா என் பெயர்ல அந்த பொண்ணு, உன் பெயர்ல அவங்க அப்பா பெயர். செம...என்று சொல்ல, நந்துவின் அப்பா வர, நந்து ஸ்கூலில் நடந்தை சொல்ல, அது எப்படிடா நந்து, செம ஆச்சர்யம்.. நாளைக்கு meeting இருக்குல்ல ஸ்கூல..

நானும், அம்மாவும் வரோம், அவங்கள பாக்கறோம்.. அன்று நடந்தை, பல கதைகளை சொல்லி கொண்டே போனான் நந்து...

அதே சமயம், நந்திதா வீட்டுக்கு வந்ததும், அமைதியாகவே இருந்தாள்.. அம்மா கேட்டும், எதுவும் சொல்ல வில்லை..அப்பாவிற்காக காத்து கொண்டுயிருந்தாள்...வந்ததும், வேகமாக ஓடி கட்டி கொண்டு, இந்த ஸ்கூல் பிடிக்கல அப்பா..என்று சொன்னதும்.. இருவர்க்கும் ஒன்னும் புரியல.. என்னாச்சு டா.. என்று பொறுமையாக கேட்க...அன்று நடந்ததை சொன்னதும், இருவர்க்கும் ஆச்சர்யம்... என் பெயர்ல அந்த பையன், உன் பெயர்ல அவங்க அம்மா பெயர்.. கேட்கவே, செம இன்டெரெஸ்ட்டிங் இருக்கு என்று அப்பா சொல்ல.. நந்திதா அம்மாவும், ஆமா, ஆமா, இதுவரைக்கும் இப்படி ஒரு ட்விஸ்ட் கேட்டதேயில்லை... இதற்கு போய் ஸ்கூல் வேண்டாம் சொல்லுவியா..இல்லப்பா, எனக்கு அவனை புடிக்கல, உங்க பெயர்ல அவனா...என்று அலட்டிக்கொள்ள...அப்பாவும், அம்மாவும் சிரித்து கொண்டே, உன் பொண்ணு லைப்-ல அடுத்த ஸ்டேஜ் போற என்று சொல்லி சிரித்துக்கொண்டே.. 

நாளைக்கு meeting இருக்குல்ல ஸ்கூல..

நானும், அம்மாவும் வரோம், அவங்கள பாக்கறோம்.. அன்று நடந்தை, பல கதைகளை சொல்லி கொண்டே போனாள் நந்திதா..

மறுநாள்,

அலாரம் அடிக்காமல், நந்துவும் எந்திரிக்க, அவனின் அப்பாவும், அம்மாவும் கூட.. அதே போல், நந்திதாவிற்கு முன்னே, அவள் அப்பா எந்திரிச்சு, எல்லோரையும் எழுப்பி விட்டு, ஸ்கூலுக்கு போனும்..சீக்கிரம்.. என்று சொல்லி கொண்டு அங்கே அங்கே ஸ்கூலுக்கு ரெடி ஆகினார்கள்..

ஸ்கூலுக்கு வர வர, நந்திதா கார்-ல அப்பாவிடமும், அம்மாவிடமும், நந்துவை பற்றியே சொல்லிக்கொண்டே வந்தாள்.. அவனை, நறுக்குன்னு நாள் கேள்வி கேளுங்க அப்பா, என் பொண்ண ஏன்டா மொறைக்கறன்னு... அவன் மூஞ்சியும், கண்ணும்..உங்க பெயர் வெச்சுருக்கா, அதனால சும்மா விடறேன் என்று செல்லமாய் புலம்பி கொண்டே வந்தாள்..

நந்துவும், அப்பாவுடன் காரில் வரும் பொழுது, அவளை பற்றி சொல்லிக்கொண்டே வந்தான்... என்ன திமிரு அம்மா அவளுக்கு, என்னை பார்த்து மொறைக்கறா..உன் பெயர் வெச்சுருக்கா அம்மா, அதனால சும்மா விடறேன். என்று வீட்டிலிருந்து, ஸ்கூல் வரை புலம்பி கொண்டே வந்தான்..

இருவரும் ஸ்கூலுக்கு வந்ததும்..

பிரின்சிபால் மீட்டிங் தனி தனியே முடிந்தது.. அது வரை, அவர்கள் இருவரும் பார்க்க முடியவில்லை...
நந்திதாவும், அப்பாவும் அங்கே இருக்கும் மரத்தடியில் வெளியே உட்கார்ந்து பேசி கொண்டு இருக்கும் பொழுது.. 

நந்து, எங்கோ எங்கோ தேடி, நந்திதாவை பார்த்ததும், வேகமாக ஓடி சென்று அம்மாவிடம், அந்த பொண்ணு அங்கதான் இருக்கா வாங்க என்று சொல்லி..இழுத்து கொண்டு போக..மரத்துக்கு இந்த பக்கம் வந்து நின்றதும், நந்துவின் அம்மா, நந்திதா பின்னாடியில் இருந்து, 

ஹை நந்திதா என்று சொன்னதும், ஹாய் என்று சொல்லிக்கொண்டே திரும்ப, அங்கே நந்துவும், அம்மாவும்...சிரித்துக்கொண்டே.. 

சில நொடிகள், நந்திதாவின் அப்பாவும், நந்துவின் அம்மாவும் உறைந்து நிற்க... 

மௌனம், பல வார்த்தைகள் பேசியது கண்களால்...

சில நொடிகளில், 

நந்திதா,  ஹை ஆண்ட்டி..
ஹை டா.. நான் தான் நந்துவோட அம்மா, நந்திதா.. என்று சொன்னதும்.. 
என் பெயரும் அதான்... ஆச்சர்யமா இருக்கு...
என் பெயரா ஆண்ட்டி..

இல்லடா, எனக்கும் உனக்கும் ஒரே பெயர்.. உங்க அப்பாக்கும், என் பையனுக்கு ஒரே பெயர்.. அதான் ஆச்சர்யம்... இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும், அம்மா எதிர்பாக்கல நந்து...

இங்கே, நந்திதாவின் அப்பாவும், அப்பா என்னப்பா, ஒரே silent ... அஹ்ஹஹ்ஹ அது ஒன்னும் இல்லடா, அப்பாக்கு செம ஷாக், புதுசா இருக்கு..என்னை சொல்றதுன்னே தெரில..  first time பேசுறேன்ல அதான்..

மெதுவாக நந்துவை பார்த்து, ஹை நந்து என்று சொன்னதும்.. நந்துவும் ஹை அங்கிள்.. ரெண்டு பேரும் நல்ல friends இருக்குங்க..சண்டை போடா வேண்டாம், நல்லா பேசுங்க..ஹாப்பியா இருங்க..

தயங்கி, தயங்கி.. முதல் முறையாக..நந்திதாவின் அப்பா, நந்துவின் அம்மாவை பார்த்து,

எப்படி இருக்கீங்க.. நந்துவின் அம்மாவும்... நல்லா இருக்கேன்.. நீங்க ?

என்று, பேச தொடங்கியதும்.. சட்டென்று நந்துவின் அப்பாவும் , நந்திதாவின் அம்மாவும் வந்தவுடன்..intro கொடுத்து கொண்டு, கொஞ்ச நேரம் பேசிவிட்டு..  

நந்திதாவின் அப்பா, ஓகே சார்..உங்களையும், உங்க wife பார்த்தது ரொம்ப சந்தோசம்.. கண்டிப்பா ஒரு நாள் வீட்டுக்கு வாங்க என்று சொல்லி, மொபைல் நம்பர் எஸ்ச்ங்கே செய்து விட்டு, கிளம்பினார்கள்..

நந்துவின் அம்மாவும், கண்டிப்பா நாங்க வரோம்..என்று சொல்லி கொண்டு கிளம்பினார்கள்..

கிளம்பும் பொழுது, நந்துவும், நந்திதாவும் கை கொடுத்து கொண்டு பை சொன்னார்கள். அப்போது, மறுபடியும் ஸ்கூல் பெல்...அடிக்கிறது..

தனி தனியே கார் எடுத்து கொண்டு, ஒன்றாய் போனார்கள் சிறு தூர பயணமாய்..

இருவரின் காரில் ஒரே பாடல், 

"
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்

"

அங்கே இரண்டு பாதையின் பிரிவு வந்ததும், எல்லோரும் பார்த்து கொண்டு பை சொல்ல.. நந்துவின் அம்மாவும், நந்திதாவின் அப்பாவும் பார்க்க வில்லை.. 

எதிர் திசையில் திரும்பி கொண்டு, 

இதயத்தில் பெரிய பாரமும், முதல் முறையாக பேசிவிட்டு, திரும்பவும் ஒரு முறை பார்த்து விட்ட சந்தோசம், கண்கள் ஓரம் வரும் கண்ணீரை தெரியாமல் தொடைத்து கொண்டே கார் திரும்பியது....

அப்போதும் அதே பாடல், இருவரது காரிலும்..

"
மொழியைப் பறித்தாள் மௌனம் கொடுத்தாள்
சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்
விழிகள் முழுதும். நிழலா இருளா
வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா
சருகென உதிர்கிறேன் தனிமையிலே
மௌனமாய் எரிகிறேன் காதலிலே

"

அந்த சொல்லப்படாத முதல் காதலின் நினைவுகளோடு அவர்கள் பயணம்...

எழுத்தும், கற்பனையும்
கல்யாணராமன் நாகராஜன்

Add Your Comments

Say Something

 

Comments

No comments.