நன்றி பகலவா !!!
By Admin - 19 Jan 2025 42 0


தைத் திங்கள் தழுவிய
தமிழ் மகளின் தாலாட்டலில்
ஈரைந்து மாதங்கள் சுமந்த,
மேகக் கூட்டத்தில் ஓரமாய்
ஒளிந்துக் கொண்டே
வெட்கத்தில் பிறந்தான் அந்த பகலவன்!
சில மதங்கள், பலப் பிரிவினைகள்,
ஓராயிரம் கண்டாலும் - வாழும் பூமியே
சூரியக் குடும்பம் தானே..?
ஆதியரே,
நிற்காமல் உன்னை சுழல்கிறோம் இன்றும்
நிலையானது, உன் ஒளியழகு,
தீயென, தேகத்தை சாய்த்தாலும்,
தலைவனே, உனது கருணை விழியால்,
நிலத்தில், மழையும் பெய்யும்...
மண்ணுக்கும், உனக்கும் உள்ள உரையாடல்,
என்றுமே இரகசியம்..
இயற்கையின் தகப்பன் அல்லவா நீ...
உன், ஒளியால் செழிக்கும் இந்த மண்ணில்,
புதுமைகள் மலரும், பசுமைகள் பரவும்,
அறுவடை இந்த,
நிலத்திற்கும், எங்கள் எண்ணத்திற்கும்..
நாளைய வாழ்வை, நம்பிக்கையுடன்
விதைக்கிறோம் நாங்கள் இன்று!
உன் ஒளியில்லாமல் வாழ்நிலம் வாழ முடியாது,
விளைச்சல் இல்லாமல் மனிதன் வாழ முடியாது!
வருடங்கள் கோடி கடந்துப்போனாலும்,
உனக்கு நன்றி சொல்லவே
மீண்டும் மீண்டும் பிறப்போம்,
எங்கள் ஆதவனே...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories

07 Dec 2021
மருட்சி
நள்ளிரவு இரண்டு மணி,அங்கங்கே, மினுமினுக்கும் மின் கம்பத்தில் இருக்கும் விளக்குகள்.. காற்றின் வேகம் சற்று கூடவே, சிறு தூறலாக இருந்த மழை, சட்டென்று வேகம...

24 Mar 2022
உன்னை தவிர எதுவுமே...
உன்னை தவிரஎதுவுமே,தோன்றவில்லைஎன்றுமே...உன் விரல்பிடித்துபோக வேண்டும்நெடுந்தூரமே....உன் விழிஆழம் வரைசென்றிடுவேன்நானுமே...போகும் வரைபோய்விடலாம்காதலின் உ...

07 Sep 2022
மாய கண்ணன்
கண்ணன் தேடிய ராதை,யமுனை யோரம் வந்தாள்..கண்கள் காய்ந்திட,கால்கள் தேய்ந்திட,பாவமாகி நின்றாள்..மாய கண்ணன் குழல் கேட்டதும்,தன்னை மறந்துபறந்...