நானும் ஒரு தகப்பனாக

11 Feb 2020 Admin

உன் உயிரணுவில், என்னை நகலெடுக்க..
நின் முதற் வங்கணம் நீயன்றோ !!!

கருவறையில்,
என்னை காணாது, நீ கொண்ட காதல்..
அதன் யான் காணாமல், யாதனம் கொண்டேனோ !!!

சிறு விதையாக, மண்ணில் வந்த என்னை...
முதலில் கண்டவுடன், நீ என்ன நினைத்தாயோ !!!
இருளை தகர்க்கும் தகிழி போல் நீ நின்றாயோ !!!

நீ அள்ளியணைத்த கணங்கள், அத்தனையும் ஒரு 
பெட்டகமாய் என்னுள், அகழ் எடுத்தாலும் 
அது ஊற்றெடுக்கும் !!!

முதற் அன்னம் நானெடுக்க, உன் தோள் மீது என்னை சுமந்தாய்..
அன்று சொன்ன நிலா சோறு கதைகளும், ஒற்றை கன்னன் கள்ளத்தனமும்..
இன்றும் இனிமை !!!

ஏன்னெனில்...

அந்த நிலவை பிடிக்க முடியாது என்று தெரிந்தும்,
கதையாக கையில் வைத்து கொண்டு,
என் நெஞ்சில் நம்பிக்கை என்னும் விதையை
விதைத்த முதல் தெய்வம் நீ !!!

அன்று தொடங்கியது பயணம்...உன்னை நான் தொடர....

உன்னுடன், மிதிவண்டியிலும், மோட்டார் வண்டியிலும்
பயணம் செய்த பொழுது, உன் சட்டையை பிடித்து கொண்டு,
காற்றை கிழித்த என் குரல்களின் கதைகள் ஏராளம் !!!

இன்று வரை, என் கற்பனையிலும் நினைவில்லை, 
கருவு முகம் கண்டதில்லை...
செல்லமாக கூட அடித்த தில்லை!!!
இந்த ஜென்மத்தின், யாருக்கும் கிட்டாத ஒரு தகப்பன் நீ !!!

பேரண்டம் எங்கும் தேடியும், 
உன் காரிகையும் இலகும், 
பொறுமையும் கண்டு, அந்த
தெய்வம் ஒரு வெற்றுரை !!!

இந்த நொடி வரை
என் நிழலாக நீ தொடர்வதால் என்னவோ...
கடிகை வேகங்கள் மிஞ்ச, நான் பயணிக்கிறேன் !!!

துன்பங்கள் வந்தால், அதை துகளாக்கவும்..
விழும்போதெல்லாம், எழவும்..
கற்று தந்தவர் நீங்கள் !!!

வியர்வியன் அர்த்தமும்,
தியாகத்தின் ஒருங்கிணைப்பும்,
சுமைகளின் அண்ணலும்,
நீங்கள் !!!

என் வாழ்வில் வழிகளை தந்து,
உன் வாழ்வில் வலிகளை மறந்தாய்..

எனது காற்றாக இருப்பவர் நீங்கள்,
காற்றில் கலக்கும் முன்னே,
பாதுகாக்க போராடுகிறேன் !!!

நானும் ஒரு தகப்பனாக, இன்று தான் உணர்தேன்...
அர்ப்பணிக்க தெரிந்தால் என்னவோ ?
அப்பன் என்று சொன்னார்கள் !!!

நான் உருவமாகும் முன்னே, 
உயிரளித்த உன்னை என்றும் மறவேனே !!!