நிலை மாறுமோ...

24 Oct 2020 Admin

வாழ்க்கையே தேடுறேன்,
கண்களை கட்டியே,
கண்ணாமூச்சி ஆடுறேன்,
எந்த திசையிலும்,
வழிகள் தெரியல..

எங்கோ முடியுது,
இங்கேயும் தொடங்கது,
கனவுகள் ஏனோ,
கனவாய் மட்டும் போனது..

இரவும் வருது,
பகலும் வருது,
விடியலை தேடியே,
கண்களும் ஓடுது...

நிலை மாறுமோ...

அவன் இவன் காரணம்,
குறைசொல்ல நேரம்,
தன்னை மாற்றிக்கொள்ள,
ஏனோ எண்ணமில்லை..

நாளையென்பது யில்லை,
இன்றும்கூட நிச்சயமில்லை,
உறக்கம் கலைந்தால் தெரியும்டா,
நாம் எழுவதும்,
நம்மை சுற்றி அழுவதும்,
வாழும் நேரம் சிலநேரம்,
அதுவரை போராடு,
அன்போடு நீ உறவாடு...