நீ

08 Dec 2020 Admin

காற்றின் ஒலி நீ,
அருவியின் ஓசை நீ,
இதயத்தின் இசை நீ,
குழந்தையின் சிரிப்பும் நீ

வேதங்கள் ஓதும்
நாதமும் நீ,
யாகங்கள் தரும் 
சாம்பலும் நீ,
அன்பில் தெரியும் 
உருவமும் நீ, 
கோபத்தின் 
தனலும் நீ,
அலங்காரியும் நீ,
பத்ர காளியும் நீ 
என்னுள்;
கருணையும் நீ,

மலரின் அழகும் நீ,
உருகும் பணியும் நீ,
இளம் வெயில் நீ,
இரவின் குளிரும் நீ,
புல்லின் பனித்துளி நீ,
பறவையின் சிறகும் நீ,
தாயின் வாசமும் நீ,
தந்தையின் தோளும் நீ,
தோழமையின் கையும் நீ,

நிழலும் நீ,
அண்டமும் நீ - என்
பிண்டமும் நீ,
வான் தரும் மழை நீ,
மண் வாசமும் நீ,
நிலவும் நீ,
நீர் - நெருப்பும் நீ,

உன் விழியசைவிலே,
உலகை அளந்தவள் நீ,
மாயக்காரியும் நீ,
மந்திரம் எழுதியவள் நீ,
கற்பனையும் நீ,
கற்சிலையும் நீ,
நிற்பதும் நீ,
நடப்பதும் நீ,
பார்ப்பதும் நீ,
பறப்பதும் நீ,

என்
பிறப்பும் நீ,
வாழ்வும் நீ,
இறப்பும் நீ,
இந்த - ஜென்மமும் நீ,
என் - கர்மவினையும் நீ,
உணர்வும் நீ,
உயிரும் நீ,
ஏழ்மையும் நீ,
உயர்வும் நீ,

என்னுள் பல - நீ யிருப்பதால்,
நான் நானாக அல்லை - நீயே
நானென்று நினைத்து - நின்னை
கதி என்று சரணமெய்தினேன்..