படத்தின் தலைப்பு..

24 Oct 2020 Admin

கதையும் உண்டு,
திரைக்கதையும் உண்டு,
யாவரும் கண்டதில்லை,
பெரிதும் உணர்ந்ததில்லை..

முன்னூறு நாட்கள் 
ஓடுகின்ற,
வெற்றி காவியம்...

ஒருவருக்காக இயங்கும்
உலகின் அதிசய திரையரங்கம்,
கதாபாத்திரம் அறிமுக 
காட்சியில் அழும்பொழுது,
உலகமே சிரிக்கும் ஒரு விந்தை..

தாயின் கருவறை..
படத்தின் தலைப்போ,
"பிள்ளை"