பிச்சை

By Admin - 16 Jun 2022 52 0

அம்மையும் அப்பனும்
யார் கண்டார் - பிச்சை 
வாழ்விலே பிச்சை யின்றி 
யார் இருப்பார்...

இருப்பவனோ 
உன்னிடம்
நெருங்கி வருவான் 
இல்லாதவன்,
வெளியில் 
யார் காண்பர்
என்னை போன்று
தோற்றம் கொண்டு 
தான் தெரிவார்..

பெற்றவளும்,
பெற்றுக்கொடுத்தவளும்,
பெற்றடுத்தவளும்,
யார் துணை வருவார்..
போனதும் ஒரு நாள் 
அழுகை வற்றி போகும்,
மறதியும்
மாமருந்து ஆகும்,

துணை 
எதுவென்றி 
தேடி...
இங்கே 
பாத்திரம் தான் 
அதன் சூத்திரம்
நீயும் அறிவாயோ...

பிச்சை என்னும் 
வாழ்விலே - உள்ளே 
பிச்சே கேட்பவனும்
வெளியே
என்னை காணாததும் 
நீ அறிவாயோ..

அன்னம் தானம் 
யாருக்கோ,
இங்கே காய்ந்து 
கிடக்கும்
இந்த 
பிண்டத்திற்கோ...
ஏன் இந்த 
வாழ்வோ - என்றோ
யார் செய்த பாவமோ..

ஒரு வாய் பிண்டம்
இல்லை இங்கே,
தண்ணீரும் தர மனம்
இல்லை இங்கே...
கேள்விகள் கேட்க
மனம் அல்லாது
கல்லாகி 
போனாயோ ..

கண் கொண்டும்
கால் கொண்டும்
கை கொண்டும்
வதனம் மெருகும்,
நண்ணு மனமே
இல்லையோ...

வெயிலும்,
மழையும்
எல்லாம் ஒன்றே,
மருந்தும்,
அருந்தும்
அல்லாது...
பிணியும்
சேராது...

இச்சை கொண்டவன்
நானே - மறு ஜென்மம்
ஆசை துறந்தேன்..
இந்த நொடியில் 
ஜீவன் சென்றாலும்
ஒரு வாய் பசியாகி 
போக அருள்வாயோ...

Add Your Comments

Say Something

 

Comments

No comments.