மதி அழகி

By Admin - 23 Dec 2024 73 0

தனிமையில் நானும் அவளும்,
அந்த மொட்டை மாடியில்...
அவளின் மொழி எனக்கு தெரியாது..
விடியல் வரை பேசிக்கொண்டோம்..
மனம் மிக லேசானது.
அவளுக்கும் தான்..
நேரம் போனதே தெரியவில்லை..
அவள் தோழன் வந்துவிட்டான்,
இவள் சென்றுவிட்டாள்..
இரவு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே 
மறைந்தாள் அந்த மதி அழகி..

Add Your Comments

Say Something

 

Comments

No comments.