மனமே

By Admin - 16 Apr 2023 348 0

தரை தொடும் 
முகில் அழுவதில்லை..

நதி சேர்ந்து
கடல் கலந்து
மீண்டும் துளிரிதே..

அவ்,
விதி என்றோ 
கலங்குவதில்லை ?

மதி கொண்ட 
மானுடர்
மயங்குவதென்ன !!!

நீ செய்வதை - பிரித்து,
இடார் க்கொண்டு,
தீர்ப்பு சொல்ல வானத்தில்
யாரும் யில்லை...

சித்தாந்தம் அறியாய்,
அந்தம் அறியோம்
வேதாந்தம் அறியோம்,
அந்தம் அறியாய்...

நித்திரை கொள்ளாத
மனமே - நீ
சற்று ஓய்வு கொள்...

கன நொடியில்,
பல தூரங்கள்
செல்லும் உன் 
வேகத்திற்கு - நீ
ஓய்வுகொடு....

வானில் வரும்
தாரகை தரை
தொடும் நொடியில்
நீ தொடா தூரத்தில்
சென்றுவிட்டால் - நான்
எந்த சிந்தனைக்கு 
வேள்வி வைப்பேன் ?

Add Your Comments

Say Something

 

Comments

No comments.