மறைக்காதடி, மறுக்காதடி

By Admin - 06 Dec 2021 498 0

காலங்கள் மாறும்,
திசைகள் நான்கும்,
தொலைந்து 
போவோமே
நாமும்..

உன் விறல் பிடித்து
போகும் தூரம்
உலகின் நெடுந்தூர
பயணம்..

மறைக்காதடி,
மறுக்காதடி - என்
காதலை துரத்தாதேடி

விழியில் விழுகிறேன்,
ஓரமாய் கரைகிறேன்,
மரபணு மாற்றம்
செய்கிறாய் என்னுளே..
உன் மடியில் 
நானும் உறங்கிட,
நிலவும் மறந்து 
போகும் மறைந்திட,
இமைகளின் 
சிமிட்டலும்,
நின்று போகும்
இமைக்காது 
உன்னை கடந்து 
போக..

மறைக்காதடி,
மறுக்காதடி - என்
காதலை துரத்தாதேடி

எங்கோ நீ இருக்க,
இங்கே உன்னை அணைக்க,
நினைவுகள் கடத்தி போகும்
காலம் கடந்தும்
காதல் கதை சொல்லும்..

அடி,
நீராவியே உன்னாலே,
காற்றில் மெல்ல மெல்ல,
கரைகிறேன்..
மாயாவியே,
தன்னாலே என்னை
மறக்கிறேன் - இந்த 
உலகத்தை புதிதாய் 
ரசிக்கிறேன்..

மறைக்காதடி,
மறுக்காதடி - என்
காதலை துரத்தாதேடி

Add Your Comments

Say Something

 

Comments

No comments.