மலர்களே மலர்களே

By Admin - 11 May 2024 303 0

மலர்களே மலர்களே
அழுகை வேண்டாம்...
வாடினால் வாடினால்
உதிர வேண்டாம்..

காலங்கள் கூடிவருமே,
ஒதுங்க வேண்டாம் - உன்
சிரிப்பிலே துளிர் விடுவாய்
கலங்க வேண்டாம்....

வருவதும், போவதும் 
இயற்கையே - இதில் 
நீயென்ன நானென்ன..

இந்த நொடியே,
இமைக்காமல் நீயே,
பார்த்திடு - உனக்கென்ன
நாள் வருமே நிமிர்ந்திடு...

தடங்கல் தடையுமும்,
பாதை மறுக்குமே - நீயே
எல்லாம் என்று மலர்வாயே...

போகும் பாதையும் 
தூரமில்லையே - முட்களும்
நீண்ட வலியில்லையே...

விழியிலே ஈரம் வேண்டாம்,
வழியெல்லாம் பூக்களே, 
வந்துவிட்டால் - நீ மேலே 
வந்துவிட்டால் - போனதும்
உன்னை தேடுமே...
உனக்கான நேரம் வருமே...

- கல்யாணராமன் நாகராஜன்

Add Your Comments

Say Something

 

Comments

No comments.