மாயக்கண்ணன்

By Admin - 22 Jul 2023 321 0

வணக்கம் !!!


இது என்னோட first episode ... அதனால எப்படி ஆரம்பிக்கறது தெரியல...

கொஞ்சம் தயக்கம்...


ஹ்ம்ம். மெதுவாக இழுத்து மூச்சு விட்டுக்கொண்டே...


உறவுகள் பலவிதம்,

உணர்வுகள் ஒரு விதம்..


நம்மிடம் விரும்பி வந்து பேசும் உறவுகள் ஆயிரம் கிடைத்தாலும், இந்த ஒரு நிலையில்லாத மனசு ஏனோ, நாம் விரும்பி பேசும் உறவுகளையே அதிகம் நேசிக்கும்...


ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்..ஹ்ம்ம்..மெதுவாக தொண்டையை கனைத்திக்கொண்டே...


கல்யாணம் பண்ண உடனே, அவர்கூட வெளிநாடு போலாம், எந்த தொந்தரவும் இல்லை, ஜாலி தானே, அந்த ஆசை வார்த்தைக்கு அடிமையாகி, இன்னைக்கு.... என்னாச்சு, எப்படி இருக்கீங்க, என்ன பண்றீங்க ? பேச ஒரு ஆள் இல்லை... அவருக்கு... அதாவது என் husband கிருஷ்ணாவிற்கு தனி உலகம், அவருடைய வேலை..அதனால ஊடலும், கொஞ்சலும், சிணுங்கலும் ஆலங்கட்டி மழை போன்று, எப்போதாவது...


ஒரு கட்டத்தில், என் மேலே எனக்கு வெறுப்பு, வாழ்க்கையின் மேல் கோபம், அதுவும், அழகான, அன்பான உறவுகளை இழந்த மோகமான, சொகுசு வாழ்க்கை... யாருக்காக, எதற்காக ? பல கேள்விகள் என்னுள்.. இந்த, சூழலில்  என்னை தவிர யாரும், என்னை காப்பாற்ற  வாய்ப்பில்லை என்னும் பொழுது, ஏதோ தேடல் ஏற்பட, சட்டென்று தேடலின் தொடக்கமாய் தொடங்கப்பட்டது, இந்த PODCAST.. இதில், நிறையா பேசலாம்...


எனக்காக நான் புனை பெயரில் உருவாக்கிய எனது உலகம்...


அதில் நீங்களும்...


எதிர்பார்த்து கிட்டே இருந்தா, எதுவும் நடக்காது. எதிர்பார்க்காமலே இருந்தாலும் நடக்கிறது நிறுத்த முடியாது. அதனால, நாம நம்ம உறவுகளை அழகா நேசிப்போம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.. அப்படிங்கிற, சின்ன தத்துவத்தோடு, இன்னைக்கு episode கிளோஸ் பண்றது, 


"உங்கள் மாயா"


இந்த மாய உலகத்தில் இருந்து..


சில நாட்களுக்கு பிறகு... 


மாயா, வெளிநாட்டில் இருந்து கொண்டே, தன் அடுத்த episode content எழுதி கொண்டு இருக்க, மாயாவின் வீட்டில், அவரது கணவர் கிருஷ்ணா ஆப்பிள் மியூசிக்-இல், favourite song play செய்கிறார்.. 


அதே சமயம், எங்கோ எதிர் திசையில், பல ஆயிரம் மைல்கள் தாண்டி இருக்கும், கண்ணன் தனது வீட்டில், தன் அடுத்த கவிதையை எழுதி கொண்டு இருக்க, பின்னால் இருந்து, கண்ணன் கழுத்தை கட்டிப்பிடித்து போன்று உணர்வோடு,  அவன் கவிதைகளை மஹா ரசிக்க தொடங்கினாள்...


இரு வேறு இடத்திலும், ஒரே பாடல் ஒலிக்கிறது...


"உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே"


இரு வேறு உறவுகளும் அழகிய மெய்மறந்து சிரிப்பில்....


ஒரு திசையில் மாயாவும், மருதிசையில் கண்ணனும்...


"மாயக்கண்ணன்"


எப்போதும் தனிமையின் வலியோடு, கவிதையை எழுதி கொண்டு இருந்த கண்ணனுக்கு, மஹாவின் பிரிவு எல்லாருக்கும் ஒரு செய்தி, கண்ணனுக்கு அது வலி… அந்த வலியில், அவன் எழுதிய பல வரிகள் சொல்லும் அவனின் தனிமையை. 


தன் வீட்டின் பால்கனியில், சுவற்றில் ஒரு கால் வைத்து சாய்ந்து கொண்டு, மழையை ரசித்து கொண்டே.. ஒரு கையில் காபி வைத்து கொண்டு.. Podcast -இல் கண்ணன் பார்த்த புது தொடக்கம், "மாயக்கண்ணன்" அது தெரியவில்லை அவன் வாழ்வை மாற்றும் என்று..


கண்ணன் பெயர் இணைப்பு கொண்ட ஒரு புதிய Podcast. தன் மனைவி மஹாவின் புனை பெயரோ மாயாதேவி..அதே போல், மாயா தொடங்கிய podcast அவள் பெயர் மஹா, அவர் பெயரோ கிருஷ்ணன், அதன் காதலாக புனை பெயரில் தொடங்கப்பது மாயக்கண்ணன்..


கண்ணன், மாயாவின் முதல் episode கேட்ட உடனே, தன்னை மறந்து போனான்.. மீண்டும், மீண்டும் அவள் பேசிய "உங்கள் மாயா", “உங்கள் மாயா” என்ற மாய வார்த்தையும், அவளின் தொடக்கமும், வலியும்.. 


கண்ணனின் தேடல் தீவிரமானது, நேரங்கள் கடந்து போக.. இறுதியாக, தொழில் நுட்பத்தின் உதவியோடு மாயாவின் email id கண்டுபிடித்து விட்டு, உடனே, அவன் முகவரியில் இருந்து, மாயாவிற்கு ஒரு முதல் email. வேகம் இருந்தது, வார்த்தை வரவில்லை.. ஒரு மனதாக, சிறு கவிதையோடு அனுப்ப முடிவு செய்து, தோன்றியதை அனுப்பிவிட்டான் கண்ணன்...


ஹாய் மாயா,


உங்கள் மாய உலகத்தில், நுழைய எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும், "உங்கள் கண்ணன்"


"உறவின் நியதியே, 

இருக்கும் பொழுது தேடாமல் இருப்பதும், 

இல்லை என்ற பொழுது தேடுவதும்..

"


மாயாவிற்கு இது மாலை நேரம்... கார்டன்-இல் உள்ள பெஞ்சில், ஒரு கையில் காபியும், கண்களும் social மீடியாவை அலசி கொண்டு இருந்தது..


Mobile phone -யில் notification சவுண்ட் வந்தது...டிங்...டிங்..., அதுவும் மாயாவின் podcast பெயரோடு வந்ததும். காபி cup கீழே வைக்க, அது தடுமாறி கொட்டியது, உடையும் நனைந்தது… கண்ணன் அனுப்பிய ஈமெயில்-ஐ படித்தாள் மாயா என்கிற மஹா...

சிலவரிகள் ஆனாலும், சிறு சந்தோஷம் அவளுள்..  காரணம், தன் podcast கிடைத்த முதல் follower.. சில நொடிகள் யோசித்து, கண்ணனின் email -க்கு reply தந்தாள்..

Dear கண்ணா,


Thank you

உங்கள் email- யில் நீங்கள் அனுப்பிய குட்டி கவிதை சூப்பர்.  உங்கள் கவிதைக்கு நான் இன்று முதல் fan மற்றும், podcast கேட்டு, அதற்கு பதில் தந்ததற்கு நன்றி.. 


ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்த கிருஷ்ணன்... 

என்ன மஹா, ஒரே டென்ஷனா இருக்கீங்க.. 

மஹா சிறிது நேரம் பதில் பேசாமல், ஆழந்த சிந்தனையில்.. 

கிருஷ்ணன், ஹே மஹா என்று உலுக்க, 

சாரி கிருஷ்ணன் கவனிக்கல.. 


கிருஷ்ணன் அதற்கு, என்னாச்சு மஹா... உங்க வீட்டுல எல்லாரும் ஓகே தான ? உங்க உடம்புக்கு ஏதாவது ? ஆல் ஓகே ... 


மஹா...பதிலுக்கு ஹ்ம்ம்...என்று சொல்லி தலை அசைக்க..  கிருஷ்ணன், ஓகே குட்.. என்று சொல்லி தன் அடுத்த வேலைக்கு சென்று விட்டான்.. யாருக்கு வேணும் உங்க ஓகே என்று முனுமுனுத்தாள்.


மறு திசையில், அவள் reply-க்கு காத்திருந்தான் கண்ணன்..சட்டென்று ding ஒரு சவுண்ட், mobile phone notification . மாயாவின் reply... அதை படித்ததும், உறைந்து போய் சிறு நொடிகள் கண்களில் இருந்து நீர் துளிகள். மாயாவிற்கு reply செய்கிறான்,


ஹாய் மாயா,


You made me cry after my wife .  என் மனைவின் பெயர் மஹா, அவள் என்னை கண்ணா என்று சொல்லும் நினைவுகள். இன்று அவள் இல்லை. அவள் புனை பெயர் மாயாதேவி ..என் பெயர் கண்ணன்..உங்கள் podcast பெயரில் எங்கள் ஜீவனும் இருக்கோமோ என்று சிறு தவிப்பு.. அவள் இருக்கும் பொழுது, இழப்பு இல்லை.. இல்லை என்ற பொழுது, இழப்பதற்கும் ஒன்றும் இல்லை…


என் மஹா கூட என் கவிதைகளை ரசித்ததில்லை..உங்கள் சாயலில் அவள்…


"வழி மறந்தேன்,

கிடைத்தது 

பறவையின் சிறகு.."


மருதிசையில், மாயா தூங்கவதற்கு செல்லும் பொழுது, mobile phone -யில் notification சவுண்ட் வந்ததும், பொறுமையாக reply கண்டதும்.. சற்றென்று ஒரு பதில் அதற்க்கு..


Hey கண்ணா,


உங்கள் கவிதை made me to think... இது என் whatsapp நம்பர். கண்டிப்பா கால் பண்ணுங்க.. but இப்போ இல்லை, காலையில.. bye ....


நேரமும் நெருங்கியது... இருவருக்கும் சிறு பதற்றம்...  கண்ணன், முதலில் மெசேஜ் செய்கிறான்..


ஹாய் மாயா...Kannan here ... shall i call you ?


ஹை கண்ணா, i will call you soon ...


சில நொடிகளில்... மாயாவின் ஆடியோ கால் whatsapp -ல் வருகிறது... 


கண்ணன்: ஹை மாயா..எப்படி இருக்கீங்க..


மாயா: ஹாய் கண்ணா, am good ... நீங்க..


கண்ணன்: good .


கண்ணன்: உங்க husband ? இருக்காரா..


மாயா: husband...என் பயமா இருக்கா உங்களக்கு…


கண்ணன்: அப்படி இல்லை...பொதுவா கேட்டேன்.. உங்க உண்மையான பேரு ?


மாயா: அது தெரிஞ்சிதா பேசுவீங்களா ?


கண்ணன்: அப்படிலாம் இல்லை. குழந்தைங்க...


மாயா: அதை விடுங்க கண்ணா...உங்க wife கூட என்ன problem ? ok னா சொல்லுங்க...


கண்ணன்: என் wife பேரு மாயாதேவி என்கிற மஹா.. என் wife என்னோட கவிதையை ரசிக்கல சொன்னேன்.. ஆனா, ஒரு தடவ கூட அவ கிட்ட நான் கவிதை சொன்ன தில்லை..இப்போ, கேட்க தோணுது.. ஆனா, அவ இல்லை... இந்த life design ரொம்ப different ... அது ஒரு மாதிரி... எப்ப வேணுமோ, கிடைக்காது... எப்போ வேண்டாமோ அப்போ கிடைக்கும்... 


சில உறவுகள், நமக்கு வேணும்னா..நாம தான், விட்டு தரணும்…


மாயா: ஹே கண்ணா.. உங்க pain புரியுது...உங்களோட pain, gain ரெண்டையும் share பண்ண, இனிமே நான் இருக்கேன்.. எனக்கும், உங்க wife க்கும் ஒரே மாதிரி பெயர்... so, நீங்க எழுதறப்போ, அவங்கள நினைச்சுக்கோங்க.. கூடவே, என் காலும் வரும்... எனக்கு உங்க போட்டோ வேண்டாம், அட்ரஸ் வேண்டாம்.. என்னோடத, கண்டிப்பா தரமாட்டேன்.. ஒரு உணர்வு உள்ள உயிர் கிட்ட பேசறதை நினைச்சுக்கோங்க..


கண்ணன்: தேங்க்ஸ் மாயா.. 

மாயா: welcome கண்ணா... catch you later .....

கால் கட் பண்ணியதும், இரு முனையிலும்...சிரித்து கொண்டே.. 

கண்ணனின் சிந்தனை....

மஹா கிட்ட பேசி இருக்கலாம்... மஹா am sorry.... நீ என்னோட தான் இருக்க..நான் அதன் நம்பறேன்...புது நம்பிக்கையுடன்..

மாயாவின் சிந்தனையோ..

கிருஷ்ணன் பேசாட்டி என்ன...நான் பேசுறேன், நான் step எடுக்காம அவரை தப்பு சொல்றது நியாயம் இல்லை.. என்னோட comfort zone காக அவ்ளோ கஷ்ட படறாரு.. புலம்பரத்துக்கு pull stop இன்னியோட...புது சந்தோஷத்துடன்..

நட்பு, காதல், காமம் எந்த பெயரிலும் அடங்காத இலக்கணம் இவர்கள்...

இந்த அழகிய உறவுகள்...

தங்கள் பயணங்களை தொடர்கிறார்கள்,

தேடலின் தொடக்கமே இது..

விட்டு செல்வது வாழ்க்கையில்லை,

விட்டு கொடுப்பதுதான் வாழ்க்கை...


சில உறவுகள் வருவதால்,

பல உறவுகள் நெருக்கம் ஆகுமானால்,

இந்த கண்ணியமான உறவுகள் என்றும்

தொடரட்டும்..



மாய உலகத்தில் இருந்து...

எழுத்தும், கற்பனையும்,

கல்யாணராமன் நாகராஜன்


Add Your Comments

Say Something

 

Comments

No comments.