மாற்றம் ஒன்றே மாறாதது...

By Admin - 11 Jul 2020 1072 0

மனிதர்கள், உண்மையிலே ஒரு அதிசய பிறவி.. 
சில வருஷத்துக்கு முன்னாடி, 
மக்களோட மனநிலை வேற,
இப்போ வேற..

மனிதனே, மிருகமாய் மாறிவிட்டாலும்..
அதன் இரக்கம் கூட, உனக்கு இங்கேது.
மிருகத்திலிருந்து, மனிதன் என்றதால், 
அதன் குரூரம் உன்னை தொற்றிக்கொண்டது..
பிரித்து உண்ணும்,
வழக்கம் மறந்து,
அடித்து உண்ணும்,
பழக்கம் வந்தது
ஒன்றை அடித்து,  நீ வாழ
உன்னை அடிக்க, 
கூட்டம் எங்கோ கிளம்புது !!!

நம்ம கிட்ட இருக்கற கஷ்டத்தை சொல்லப்போனா; அது 
கேட்க கூட யாருக்கும் நேரம் இல்ல, அது தேவையும் இல்ல..
ஒருத்தர் கிட்ட நம்ப கஷ்டத்தை சொல்லறோம்னா, காரணம்
அதுல பங்கு எடுத்துக்க இல்ல, சின்ன ஆறுதல்..
ஏனோ அந்த ஆறுதல் மூலமா, 
சில தீர்வுகாண விடை...

அதையும் மீறி கேக்கறாங்க சொன்னா,
சிலருக்கு அது விமர்சனம், 
சிலருக்கு அது பொழுதுபோக்கு, 
சிலருக்கு அது நேர கடத்தல்,
சிலருக்கு அது புறம் பேசுதல்,
சிலருக்கு அது நிலைமை சமாளிக்க முடியாம, தலையெழுத்து கேக்கறது..

முடிஞ்சவரைக்கும் இல்ல, 
எப்போதுமே நம்ம கஷ்டத்தை சொல்லாம இருக்றதே,
வாழ்க்கைல பாதி வெற்றி அடைஞ்சமாதிரி.. 
யாருக்குதான் கஷ்டம் இல்ல,
இக்கரைக்கு அக்கறை பச்சை..
இந்த உலகத்துல எப்போதுமே,
நம்மளவிட கஷ்டப்படறவங்க 
இருந்துகிட்டேதான் இருப்பாங்க..
வீட்டுக்கு வீடு வாசப்படி..

எப்போதுமே, நல்லா இருக்கோம் 
சொல்லி பழகலாமே..அதுக்கு விமர்சனம்
வராதுன்னு சொல்லமாட்டேன்,
இன்னும் பல மடங்கு அதிகமா இருக்கும்..
ஏன்னா,
நாம மனுஷங்க..

ஒரு சுவாரசியமான உண்மை,
எப்போதுமே நமக்கு தான் 
அதிக கஷ்டம் போல
அப்படிங்கற எண்ணமே அடுத்த நிலைக்கு
போக முடியாம செய்யறது..
அதிகமான இன்பம் இருக்கற நேரத்துல,
யாருக்கும் கடவுளுக்கு நன்றி சொல்ல நேரம் இல்லாம போயிடுது,
அதனால என்னவோ, அப்போ அப்போ கொஞ்ச கஷ்டமும் 
வந்துட்டு போகுது..

வாழ்க்கையும் ஒரு விளையாட்டு மைதானம் மாதிரி,
உதாரணத்துக்கு,
இந்த கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுல 
விளையாடற எல்லார்க்கும் ஒரு நோக்கம் இருக்கும்,
ஒருத்தருக்கு RUN எடுக்கணும்,
ஒருத்தருக்கு OUT பண்ணனும்,
ஒருத்தருக்கு Goal போடணும்,
ஒருத்தருக்கு அத தடுக்கணும்..

யாருமே நம்ம தடுக்க இல்லனா,
வாழ்க்கை, விளையாட்டு 
ரெண்டுமே சுவாரசியமா இருக்காது..
நம்ம தடுக்க தடுக்க,
அடுத்த நொடி,
அடுத்த அடி வைக்கறப்போ,
ரொம்ப பொறுமையா
வைக்க முயற்சி செய்வோம்..
அவ்ளோதான் வாழ்க்கை.. 

அதுபோல மத்தவங்களுக்கு அறிவுரை 
சொல்லறப்போ ரெண்டு காரணம்.
ஒன்னு, நம்மால அத செய்ய முடியாது..
ரெண்டு, நம்ம அனுபவத்துல சொல்றது..
கசப்பான உண்மை,
யாருமே, எதுவுமே,
கேக்காம இருக்கறதுதான்
அது,
அடிபட்டு கீழ விழற வரைக்கும்.. 

விழுந்தாலும், போராடனும் 
மனசும், புத்தியும் இருந்தா
கால் தன்னால ஓடும்..
இல்லனா, எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லாத மாறி வாழ்க்கை 
போயிடும்..

இன்பம், துன்பம் ரெண்டுக்குமே 
நாம மட்டும் தான் காரணம்..
எது எந்த அளவுக்கு இருக்கனும்,
நாம தான் தீர்மானிக்கனும்..

மனுஷன் ஒரு அழகான 
முகமூடியோட இருக்க வேண்டிய சூழ்நிலை..
எத்தனையோ மனிதர்கள்,
எல்லார்க்கும் 
பல முகங்கள்,
பல வேஷங்கள்,
பல பக்கங்கள்,
எல்லா முகங்களும்,
எல்லார்கிட்டயும் காட்ட கூடிய
சூழ்நிலை அமையாது..
எது உண்மையான பக்கம் 
அப்டினு தெரியாம,
வாழ்க்கையே முடிஞ்சுடுது..
ஆனா, எல்லார்க்கும் அவங்க பக்கங்கள்
நியாயம் மட்டும் தான் தெரியும், 
எந்த ஒரு காரியத்துக்கும்,
காரணம் இல்லாம இருக்காது,
இருக்கவும் முடியாது..

திடிர்னு வந்த மாற்றம் இல்ல,
குழந்தை பருவத்துல தொடங்கி
இப்ப வரைக்கும்..
குழந்தையா இருக்கற நேரத்துல,
தெரியாது இது நாடகம், முகமூடி...
யார் கிட்ட இருக்கோ,
அந்த நேரத்துக்கு, சூழ்நிலைக்கு 
தன்னை தானாக மாற்றிக்கொள்வது 
குழந்தை.. அது அன்பு...
அதுவே வளர்ந்த பிறகு கள்ள கபடம்.

கோயிலுக்கு வெளியில,
பிச்சை போடாம போறது தப்புயில்ல,
ஆனா, அதே காரணத்தை கோயிலுக்கு உள்ள
கடவுள் கிட்ட கேக்கறது..
அதுக்கு பதில் சொல்லாம முடியாம,
என்னோவோ, கடவுள் பல இடங்கள்,
கல்லா மட்டும் தெரியுதோ என்னமோ..

வாழ்க்கையில எவ்வளோ முடியுமோ,
அன்பையும், உதவியும்
எதிர்பார்ப்பின்றி செய்யறோமோ,
அந்த மனசு தான் கடவுள்..

ஆனா, அன்பு மட்டும் தான் 
என்னைக்கும் நிரந்தரம்..

துன்பமே இன்பத்தின் ஆரம்பம்,
இன்பமே துன்பத்தின் ஆரம்பம்,

இன்பமும், துன்பமும் கலந்திருப்பது வாழ்க்கை,
நம் – வாழ்நாளில்
இன்பம் இருக்கும் பொழுது,
துன்பம் வந்தால் தான் – அந்த
இன்பத்தின் அருமை தெரியும்;
துன்பப்பட்டு, இன்பத்தை அனுபவித்தால் தான்,
இன்பத்தின் சுகம் தெரியும் !!!

ஆசையே, பேராசைக்கு அறிகுறி – அந்த
ஆசையே துன்பத்திற்கும் அறிகுறி – அதற்கென்று
ஆசையே படக்கூடாது என்றில்லை – அளவோடு
ஆசைப்பட வேண்டும், அளவிற்கு மீறி ஆசைப்பட்டால் – அது
பேராசையாக உரு வெடுத்து விடும் – பின்னர்
அழிவை தேடி தரும் !!!

வாழ்க்கையில் ஒரு மனிதன் 
இன்பத்தையே;
அனுபவிக்காமல் போகலாம்
வாழ்க்கையில் துன்பப்பட்டு,
இன்பத்துக்காக 
காத்திருக்கமாட்டான் !!!

தன் வாழ்க்கையில் இன்பம் கலந்த
துன்பத்தை கொண்டிருப்பான் – ஆனால் முழு
இன்பத்தை பெறமாட்டான்..

கடைசியில்,
இன்பம் அவனை தேடி வரும் பொழுது,
அவன் – பிண்டம் கொண்டு, பலர்
அன்னம் கொண்டனரோ..

மாற்றம் ஒன்றே மாறாதது...

Add Your Comments

Say Something

 

Comments

No comments.