மாற வைக்கும் மாயை

By Admin - 28 May 2021 590 1

போதும் என்ற மனமே, 
பொன் செய்யும் மருந்து,
உண்ணும் உணவு,
உடுத்தும் உடை,
காதல்,
அன்பு,
காமம்,
பெருமை,
புகழ்,
அனைத்திற்க்கும்
போதும் என்ற நிலை உண்டு,
ஏனோ விதிவிலக்கு 
இதற்கு மட்டும்,

மனிதன் படைத்ததில்,
ஒரு அதிசயம்,
இதற்கு
ஜாதி இல்லை,
மதம் இல்லை,
இனம் இல்லை,
நல்ல வேலை,
மொழியும் இல்லை...
இருந்தால்,
இதற்கும் முத்திரை 
கிடைத்திருக்கும்,
சாதிகளும், 
மத கடவுளும்,
போதகர்களும்,
போர் கோடி தூக்க.
இது என் இனமடா என்று !!!

ஏன்,
இதற்கு கண் கூட கிடையாது,
ஆனால், 
போகாத பயணம் இல்லை,
பார்க்காத இடம் இல்லை,
தேடினால் கிடைக்காது,
கிடைக்கும் பொழுது,
கிடைக்காது..
அது,
நினைத்தால் மட்டும்
உன்னை சேரும்..

சந்தோஷம்,
இன்பம்,
துன்பம்,
பேரின்பம்,
துயரம்,
வருத்தம்,
போராட்டம்,
இறுமாப்பு,
கஞ்சம்,
அதிகாரம்,
அடிமைத்தனம்,
பசி,
அழுகை,
சிரிப்பு,
நிம்மதி,
பயம்,

இது எல்லாம் 
கை வந்த கலை..
யார்க்கு எங்கே 
தர வேண்டுமோ,
அங்கே அவர்க்கு 
அது கிடைக்கும்..

இருந்தாலும் நிம்மதி யில்லை,
இல்லாவிடில் நிம்மதி யில்லை

அனைத்திலும் 
ஜாதி, மதம்
பார்ப்பவன்,
இதற்கும் மட்டும்
பல்லை காட்டுவான்..

இதற்கு மட்டும்,
பேச தெரிந்தால்,
நினைத்தாலே 
கற்பனைகள்,
கடல் போல் 
அலை ஆடுகிறது..
சில இடங்களில் 
சிரித்திருக்கும் - பல
இடங்களில் அழுதிருக்கும்,
கரம் நீட்டினால்,
மேலும் சேர்ந்து யிருக்கும்,

ஒரு இடத்தில்,
அடைத்து வைக்காமல்,
புழங்கி இருக்குமோ,
இருக்கும் இடத்தில் 
இருக்குமா - இல்லாத 
இடத்தில் சேருமா..

அரைஜான் வயித்துக்கு,
தினம் கூத்து நடக்கும்,
அது இல்லாமல் - பல வீடு
அரை கயிறில் தொங்கும்.

குணம் மாறும்,
இது மாறாது,
ஆனால்,
மாற வைக்கும் 
மாயை இந்த
பணம் !!!

Add Your Comments

Say Something

 

Comments

from Premalatha R at 2023-04-03 09:21:37

very nice depiction