மீனாவும் MIDDLECLASS அப்பாவும் இறுதி பாடம்

By Admin - 17 Jun 2021 707 0


இறுதி பாடம்....

அப்பா, கடைல உனக்கும், உன் தோழிக்கும் lollypop வாங்கும் போது, அந்த பொண்ணோட அப்பா, சார், அதெல்லாம் ஏதும் வேண்டாம்..இவ இப்படித்தான் ஏதாவது கேட்டுகிட்டே இருப்பா..எல்லாமே தர முடியுமா..சூழ்நிலை ஒன்னு இருக்குல்ல சார்... அட, இந்த அஞ்சு ரூபா lollypop மிகப்பெரிய சந்தோசம் சார் அவங்க உலகத்துக்கு.. விடுங்க என்று சொல்லிக்கொண்டே, அண்ணாச்சி அந்த lollypop என்று இழுக்க.. இதை பார்த்து கொண்டு இருந்த கடைக்காரரும், சார் இந்தாங்க ரெண்டு lollypop , ஒன்னு உங்க பாப்பா மீனாவுக்கு, இது இந்த பாப்பாக்கு.. நானும் மனுஷன் சார்..எனக்கும் ஒரு புள்ள இருக்குது. lollypop மட்டும் தான் தர முடியும் அன்பால...

உன்னோட தோழி அகிலா, அந்த lollypop ஒரு நக்கு நக்கிட்டு, எனக்கு taste புடிக்கல அப்பா என்று சொல்லி தூக்கிப்போட, கோவத்துல அவங்க அப்பா முதுகில் படார் என்று ஒன்னு தர, நிலை தடுமாறி அகிலா கீழே விழுந்தால்.. சார் உங்களக்கு எதுனா இருக்கா..குழந்தையை போய்...அவள் விழும் போதும், கால் அருகில் இருந்த கல் பிடரி விட சற்றே நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தால் அகிலா.. 
அருகில் அரசாங்க டாஸ்மாக், குடிமகன்கள் தன்னை மறந்து வேகமாக வண்டியில் வர, அகிலாவை கண்டதும் வேகமா brake அடிக்கப்பட்டது.. அகிலாவின் அப்பாவும், உங்க அப்பாவும் அவளை காப்பாற்ற முற்படும் போது, அந்த பைக்-இல் சென்ற மூவரும் உன் அப்பா மீது விழ, அவர் நிலை தடுமாறி அந்த கடையில் தொங்க விட்டுஇருந்த lollypop கம்பி அவர் கழுத்தில் எதிர்பாராத விதமாக குத்தி கொண்டது.. அந்த lollypop கையில் பிடித்து கொண்டு, இது என் மீனாவுக்கு வேணும், மீனா மீனா என்று சொல்லி அவர் உயிர் அங்கே துடித்து கொண்டுயிருந்தது.. இதில் கொடுமை என்னனா, அவர் உயிர்க்கு போராடுவது யாருக்குமே தெரியல..ஏதோ தெரியாம விழுந்தார்போல நினைச்சாங்க.

சற்றே, அந்த முட்டை அட்டையும், lollypop கம்பியும் கலைத்த போது, அனைவரும் அதிர்ந்தே போனார்கள். என்று அம்மா சொல்லி முடிக்க, இருவரின் கண்களும் கலங்கிப்போனது..
அழுது அழுது, நீரும் வரவில்லை, தொண்டையும் வறண்டு போனது..

மெதுவாக, அப்பாவின் புகைப்படத்திற்கு சென்று..
மீனா, அப்பா Miss you , Love you 
You are my super hero ...

அந்த நிலவை பிடிக்க முடியாது என்று தெரிந்தும்,
கதையாக கையில் வைத்து கொண்டு,
என் நெஞ்சில் நம்பிக்கை என்னும் விதையை
விதைத்த முதல் தெய்வம் நீ !!!

நான் உருவமாகும் முன்னே, 
உயிரளித்த உன்னை என்றும் மறவேனே !!!

சீக்கிரமா வாங்க அப்பா...

முற்றும்..

நகரத்தின் உள்ளே தட்டுமுட்டு சந்தில் குடியிருக்கும் அன்றாடங்காய்ச்சிகளின் வீடுகளில் தினந்தோறும் நடக்கும் சாதாரண நிகழ்ச்சி தான் என்றாலும் நடுத்தர மக்களுக்கு இது போன்ற நிலைமையை தாங்குவதற்கு மனவலிமை இல்லாததால் நாட்டில் தற்கொலைகள் நாகரீகமான மோசடி நடக்கிறது..
 
சில குடிமகன்களின் அஜாக்கிரதை, சில தெரியா நபர்களின் முன்கோபம், யாரோ, எங்கேயோ செய்யும் சில காரியங்கள், எங்கோ இருக்கும் நம்மை தாக்கும் என்பது விதியோ, கர்மாவோ.. ஆனால், இதனால் பல பெண் பிள்ளைகள் அப்பாவை அல்ல, ஒரு நல்ல நண்பனை, காதலனை, வழிகாட்டியை இழந்து, இன்னும் அங்கே அங்கே இருக்கிறார்கள்..

அவர்களுக்கும், அவர்களை போல் இருக்கும், தவிக்கும் அனைவருக்கும் இது பாடம்..

போராடுவோம், விழுந்தாலும் போராடுவோம்..

ஏன்னா, மிடில் கிளாஸ்...

நன்றி..

Add Your Comments

Say Something

 

Comments

No comments.