மீனாவும் MIDDLECLASS அப்பாவும் பாடம் 2

By Admin - 10 Jun 2021 567 2

கதைக்களம் -  ஆரம்பம் - 1
ஒரு நடுத்தர குடும்பம், தன் செல்ல மகள் ஐந்து வயது மீனாவிற்கு, அப்பா வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும், No என்று சொல்லாமல், முடிந்தவரை ஐம்பது ரூபாய்க்கு என்ன முடியுமோ அதை வாங்கி தருவார்.. 
ஒரு நாள், மீனா டிவி யில் முட்டை பார்த்துவிட, அப்பா சற்றும் யோசிக்காமல், உண்டியல் ஒரு குலுக்கு குலுக்கி ஒரு பத்து ரூபாய் தேற்றிக்கொண்டு, கடைக்கு செல்ல புறப்பட்டார். உடனே, உள்ளிருந்து ஒரு குரல் மட்டும், உண்டியல் சத்தம் கேட்டுச்சு... அதுல இருக்கறதே இருபது ரூபா, பால் வாங்கவே நாலு ரூபா இல்ல..நீங்க எங்க போறீங்க என்று சற்று கடிந்து கொண்டாள்.. சமையல் அறையில் இருந்து வெறும் பேச்சு மட்டும் வந்தது.. சற்றும் யோசிக்காமல், பால் வாங்க போறேன்..
உடனே மீனா, அப்பா எனக்கு lollypop வேணும், அதுவும் பிங்க் கலர் தான் வேணும்.. கண்டிப்பாடா.. கையில் இருபது ரூபா - என்ன செய்யவது ஒரு அப்பாவாக.. பால் வாங்கவா, முட்டை வாங்கவா, pink  lolly pop வாங்கறதா... எதுவும் யோசிக்காமல், சட்டென்று ஒரு முடிவு எடுத்தேன்.. முதலில் செப்பல் போடுவோம் என்று...
மளிகை கடை வெறும் 10 நொடிகள், ஆனால் என் சிந்தனைக்கும், காலுக்கும் பல மயில் தூரம்.. பொறுமைக்கே கோவம் வருவது போல், மிக பொறுமையாக நடந்தேன்..  
ஆனால், அங்கே கண்டே ஒரு சம்பவம்.. என் வாழ்க்கையும், எண்ணத்தையும் மாற்றிவிட்டது..கதைக்களம் -  ஆரம்பம் - 2

அங்கே ஒரு அரசாங்க குப்பை தொட்டி, சில நாய்கள் அங்கே சிதறிக்கிடக்கும் உணவுக்காக போட்டி நடந்து கொண்டி இருந்தது. சில வெளியே, சில உள்ளே..கடுமையான நிலவரம்.

அதன் அருகே, சில நாய்களை விரட்டிவிட்டு கொண்டே, அந்த தெருவிற்கே சோறு போடும் சிலிண்டர் போடும் 40 வயது நடுத்தர நபர் தன் காலை உணவை, மதியம் 12 மணிக்கு சாப்பிட்டு கொண்டு இருந்தார்.. கிழிந்த செப்பல், தலையில் இருந்து கால் வரை வியர்வை துளிகள், கையிலும், முகத்திலும் சாயம் போன்று ஏகப்பட்ட கறைகள், வெளிப்புறம் அழுக்கு நிறைந்த தண்ணி பாட்டில், ஒரு கையில் உணவு, ஒரு கையில் நாய்களை விரட்டவும், அந்த தெருவில் ரயில் தவிர அணைத்து வாகனங்கள் செல்ல கூடிய வழி, அவ்ளோ குப்பை பறந்து கொண்டே இருக்கும்...கண் கலங்கியது... 

காரணம், சற்று முன்...

நான் கடைக்கு செல்ல கிளம்பும் போது, என் வீட்டு calling bell , டொங் டொங்..டொங் டொங்..
மீனா கதவை திறந்தாள்.. அங்கே ஒருத்தர், அவருடைய செல்லில், மீனா கதவை திறந்தது கூட தெரியாமல், அவர் காசு இருந்த முட்டை வாங்கி தர மாட்டேனா, கைல பத்து பைசா கூட இல்ல.. இப்போ தான் டெலிவெரிக்கு  வந்துருக்கேன், சம்பளம் கூட போடல.. காலையில, குடிக்க காபி கூட இல்ல, கேட்ட பால் இல்லன்ற, அப்போ வீட்டுல என்ன தான் வெச்சுருக்க..நான் தண்ணிய மட்டும் குடிச்சுட்டு எப்படி வேலை செய்யறது, நான் செய்யுற வேலைக்கு, மூணு இல்ல ரெண்டு வேளையாவது சோறு திங்கவேண்டாமா... அந்த பகுதியில் பதில் வரவில்லை போல, இவரோ ஹலோ ஹலோ என்று கத்தி கொண்டு இருந்தார், சட்டென்று அவரது போன்-இல் loud speaker போட்டு ஹலோ ஹலோ, இருக்கியே, இல்ல அப்படியே போய்ட்டியா என்று கத்த, வந்த பதில் அவருக்கு மட்டும் அல்ல, எனக்கும் ஆச்சர்யம்.. அப்பா, வரப்போ எனக்கு முட்டை வாங்கிட்டு வாப்பா. காலையில சாப்பிடல, அம்மா கிட்ட கேட்டேன், அம்மா பக்கத்துல கடைக்கு போயிட்டு, கடன் சொல்லி ரெண்டு இட்லி வாங்க போயிருக்காங்க.. உங்களக்கு தண்ணி சாதம் கொடுத்துட்டாங்க, அம்மா பாவம் எதுவும் இல்ல பா.. நீங்க ஒரு முட்டை வேண்டாம், ரெண்டு...இல்ல ல்ல்லா. மூணு வாங்கிட்டு வாங்க.. எனக்கு, அம்மாக்கு அப்பறம் உங்களக்கு.. சற்றும் யோசிக்காமல், கண்டிப்பாட..

கையில் பத்து பைசா இல்லை என்றால் கூட, மகள்கள் மத்தியில் அப்பாக்கள் என்றும் கோடீஸ்வரர்கள்... இல்லை என்ற வார்த்தை தமிழ் அகராதியில் கூட மறைந்து விடும். 

அப்படி புலம்பியவர் வேற யாரும் இல்லை, சிலிண்டர் போட வந்த அந்த நடுத்தர நபர். சிலிண்டர் பில்லில் கையெழுத்து வாங்கி கொண்டு, சார் வணக்கம், வருட்டுமா சார் என்று சொல்ல நான் புரிந்து கொண்டேன், ஆனால் என்னிடம் கொடுக்க எதுவும் இல்லை அந்த இருபதை தவிர, அதற்கும் நீண்ட பட்டியல்.. சற்றும் யோசிக்காமல், அவர் அடுத்த தரவ முடிஞ்சா தாங்க சார், சம்பளம் வேற இல்லை, ரெண்டு மாடி தூக்கி வரேன்.. தண்ணி குடிக்கீறாங்களா அண்ணா, இல்லை சார் வேண்டாம்.. பரவாயில்ல கொஞ்சம் குடிங்க என்று சொல்லி முடிப்பதிற்குள், மீனா தண்ணி பாட்டில் அவர் கையில் தர, அப்பாக்கு ஏக குஷி... மனதிற்குள், உன் நிலைமை தான் எனக்கும் அண்ணா..

அவர் போனதும், மீனா, அப்பா நீங்க கடைக்கு போயிட்டு வரும் போது, ஒரு முட்டை இல்லை, ரெண்டு வாங்கிட்டு வாங்க அந்த அங்கிள் வீட்டு பாப்பாக்கு ஒன்னு, எனக்கு ஒன்னு.. பின்னாடியே ஒரு குரல், சீக்கிரமா போய் பால் வாங்கிட்டு வாங்க, பாப்பாக்கு கஞ்சி குடுக்க கூட பால் இல்லை, ம்ம்ம்..அப்படியே கொஞ்சம் பச்சை மிளகையும் வாங்கிட்டு வாங்க..

இந்த யோசனையில் தான், அவரை கண்டதும் நான் தடு மாறி விட்டேன்..

அவர் அருகில் சென்றதும், இன்னும் பதறி போனேன், 
இது போல் எங்கும் நடக்கு கூடாது.. ஒருவருக்கும் நடக்க கூடாது.. 

அங்க என்ன ஆச்சுன்னா..

தொடரும்
(இன்னும் கொஞ்சம் நேரத்துல கடைக்கு வந்துரலாம்...)

Add Your Comments

Say Something

 

Comments

from Sudhakar Arjunan at 2021-06-11 15:30:25

Seema story kalyan, keep rocking am amazed by your writing


from Velmurugan Umapathy at 2021-06-11 08:35:19

Nice Story...