முதுமை காதல்

17 Feb 2021 Admin

ரெண்டு காளை பூட்டிக்கிட்டு,
கைய நானும் புடிச்சுகிட்டு,
கூட்டி னானும் வந்தேனடி
வண்டியிலே,
மாட்டு வண்டியில..

நீ வந்த நேரம்,
எனக்கான பொன்நேரம்,
உன் துணையாக,
நான் இருப்பேன் சத்தியம்..
எள்ளளவு பிரியமாட்டேன்
கனவிலும்..

உனக்குள்ள ஒன்னாக,
கண்ணுக்குள்ள கண்ணாக,
ரெண்டு பேரும் வாழ்ந்தோமே,
உயரிக்கு உயிராக…
இப்போ, தனி மரமா
நிக்குறேனே உன்னால…

நீ தான் என் உசுருன்னு,
பல கதைகள் பேசினோம்,
அறுபதை தாண்டும் போது - இந்த ,
முதுமை காதல் ஏனோ
அழகா பிறக்கணும்…

வலிகள் நூறு வந்தாலும்,
வறுமையிலே வாழ்ந்தாலும்,
உன் கண்ண பாத்தாலே,
அந்த
பஞ்சம் , பசி, பட்டினி - பறந்து
போகும் காத்தாலே..

கைல காசு இல்லாம,
சீக்கு வந்து போனாலும்,
உன் மடியிலே கிடப்பேன்,
நான் பிள்ளையா..
உன் சின்ன முத்தம்
போதுமடி - நானும்
வாழ்ந்தேன் தெம்பா..

சோறு, தண்ணி இல்லாம,
காத்திருந்தேன் உனக்காக,
உன் மூச்சு எப்போ - நின்னு
போச்சு தெரியல - நான் இன்னும்
வாழ காரணம் புரியல...

கஷ்டத்துல சிறுச்சோமே,
பிரியாம இருந்தோமே,
நூல் சேலை வாங்கி தரல,
இருந்தாலும் என்ன விட்டு போல..
ஈர துணி போட்டு படுத்தாலும்,
உன் சிரிப்புக்கு பஞ்சமில்லை...

அப்பன், ஆத்தா கூட யில்லை,
தெய்வமா நீயும் வந்த,
கைகள் கோர்த்து நடந்தோமே,
என் நிழலையாய் நீயும் வந்தாயே..
அய்யா, ராசா, சாமி - இங்க
வாங்க கண்ணு - இதுபோல
அழகான தமிழ் வார்த்தை இல்லையே,
இதை தாண்டி நீ என்ன பார்த்த தில்லையே..

உன் நினைப்பாலே
போக வேணும் இந்த
உசுரு..

மறுபிறவி இருந்தா போதும்,
சீமதுரை போல வந்து நானும்,
உன்ன - ராணி போல வாழ
வைப்பேன் தினமும்...

அந்த ஒரு வரம் மட்டும்
இந்த ஒரு நொடி போதுமடி..