வாழு, வாழுந்துவிடு...

By Admin - 28 May 2022 63 0

நினைத்தால்
நினைத்தால் 
நினைத்ததை
நினைத்து
தினம் - நீ 
உழைத்தால்
நினைத்தது
நடக்கும்
என்றால்
தெய்வத்திற்கு
வேலை யில்லை...

நினைப்பது, ஒன்று 
நடப்பதும், ஒன்று
என்றும் 
இரண்டும்
சேராது...
சேர்ந்தால் 
எதிர்பார்ப்பும் 
இருக்காது..

வாழ்ந்த 
நேரங்கள் 
கணக்கில் யில்லை
வாழும்
நேரங்கள்
நிரந்திரமில்லை
வர போகும் 
நேரங்கள்
அறிவதில்லை..

நீ பார்ப்பது
எல்லாம் 
ஒரு முகம் 
பின்னால் பல
முகம் 
எது தான் 
நீ காணும் 
முகம் புரியாது
இங்கே
உன் முகம்
எதுவென்று 
உனக்கும்
தெரியாது...

காரணம் யின்றி
காரியம் யில்லை 
காரியம் நடக்கும்
வரை - யாரும்
விடுவதில்லை..
முடிந்த பின்னால்
தேவைகளும் யில்லை...

எங்கே போனாலும்
இங்கே வந்தாலும் 
காலங்கள் 
போக போக
நடப்பதும் மாறும்
நடந்ததும் மறக்கும்
இன்பமும்
துன்பம் 
நிலை யில்லை
எதுவும் இங்கே 
உனது யில்லை...

வந்தவர் யாரோ,
இருப்பவர் இவரோ, 
வருவபர் எவரோ,
தெரியாது..
முந்தி செல்பவர்கள்
யார் என்று 
அறியாது..

இந்த நொடியில்,
நீ சிரித்தால்
நீ அழுதால்
நீ நின்றால்
நீ நடந்தால்
நீ பார்த்தால்
நீ கேட்டால் 
அது நிஜமென்று 
நீ வாழுந்துவிடு...
அடுத்த கணம்,
நீயும் மாறுவாய்
என்பதை 
அறிவாய்...

நிழல் துணை
வரும் என்று
நினைத்தால்
நடக்காது..
உன் நிழலும் 
உன்னிடம் 
முகமூடி 
போடுவதை
நிறுத்தாது...

தெய்வம் என்று 
போனால் அதுவும் 
பல நேரம் 
கல்லாகி போகும் 
சில நேரம் 
ஊமையாகி விடும்...
மாயம் தெரிந்த
அருவம் அவனே..

விதி நினைத்தால் 
மதி தடுக்கும்..
மதி நினைத்தால் 
விதி தடுக்கும்...
நினைப்பதும்
தடுப்பதும்
எவன் வேலை,
நீ என்றோ, 
செய்த காரியத்தின்
தொடர் வேலை..

உனக்கு துணை
நீயே..
உன்னை தவிர
யாருமில்லயே..
வாழும் ஒவ்வொரு
நொடியும் 
உனதே..

அவன் 
அவள்  
இவன்  
இவள் 
என்று எண்ணி 
உன்னை நீயும் 
இழக்காதே..
உனக்குள்ளே, 
ஒருவன் 
இருக்கிறான்
மறக்காதே..

நீ
போன பின்னால் 
நடப்பதும்
தெறியாது
இருந்ததும்
தெறியாது..

சில காலம்,
எல்லாமே,
மறதியும்
மா மருந்தே..

ஆதலால்
வாழு
வாழுந்துவிடு…

Add Your Comments

Say Something

 

Comments

No comments.