வாழ்க்கையில் ஒரு மனிதன் !!!

04 Feb 2020 Admin

துன்பமே இன்பத்தின் ஆரம்பம்,
இன்பமே துன்பத்தின் ஆரம்பம்,

இன்பமும், துன்பமும் கலந்திருப்பது வாழ்க்கை,
நம் – வாழ்நாளில்
இன்பம் இருக்கும் பொழுது,
துன்பம் வந்தால் தான் – அந்த
இன்பத்தின் அருமை தெரியும்;
துன்பப்பட்டு, இன்பத்தை அனுபவித்தால் தான்,
இன்பத்தின் சுகம் தெரியும் !!!

ஆசையே, பேராசைக்கு அறிகுறி – அந்த
ஆசையே துன்பத்திற்கும் அறிகுறி – அதற்கென்று
ஆசையே படக்கூடாது என்றில்லை – அளவோடு
ஆசைப்பட வேண்டும், அளவிற்கு மீறி ஆசைப்பட்டால் – அது
பேராசையாக உரு வெடுத்து விடும் – பின்னர்
அழிவை தேடி தரும் !!!

வாழ்க்கையில் ஒரு மனிதன் இன்பத்தையே
அனுபவிக்காமல் போகலாம் – அவன்
வாழ்க்கையில் துன்பப்பட்டு கொண்டிருப்பான்,
இன்பத்துக்காக காத்திருக்கமாட்டான் !!!

அவன் – தன் வாழ்க்கையில் இன்பம் கலந்த
துன்பத்தை கொண்டிருப்பான் – ஆனால் முழு
இன்பத்தை பெறமாட்டான் !!!

கடைசியில்,
இன்பம் அவனை தேடி வரும் பொழுது,
அவன் – பிண்டம் கொண்டு, பலர்
அன்னம் கொண்டனரோ !!!