வா மனமே

By Admin - 12 Sep 2021 33 0

உறவுகள் 
இறுதிவரை யில்லை
நீ, போன பின்னால் 
நடப்பது தெரியப்போவதில்லை,
இந்த நொடி யென்பது,
நிஜமே - அதை நீ 
வாழ்ந்துவிடு மனமே..

காலம் வரும் நேரம் 
வலிகள் மறக்கும் மாயம்
கலங்கி நின்றால்
நிழலும் துணை யில்லை,
எழுந்து நின்றால் 
தோல்விக்கு இடம் யில்லை..
வா மனமே,
இது போர்களமான உலகமே,
பொறு மனமே,
இது மாறும் பொற்காலமே,
உனக்கான நேரம்,
வெற்றிக்கான பயணம்,
எழு மனமே...

வறுமை யிருக்கும் 
கலங்காதே,
திறமையும் யிருக்கு 
பயந்து விடாதே,
கடலை சேரும் வரை 
ஆற்றுக்கு ஓய்வில்லை,
வெற்றி சேரும் வரை
உறக்கத்திற்கு நேரமில்லை..
நிற்காமல் ஆறு போல் 
ஓடு மனமே..
கனவுகளை சுருக்காதே,
வானத்திற்கு எல்லை யில்லை..

வான் நோக்கி - நாய் 
குறைத்தால் - வானுக்கு
கவலை யில்லை - உன்னை 
யார் என்று கேள்வி கேட்பவனும்,
நிலை யில்லை.
அவமானம் யில்லாமல்,
வெகுமானம் கிடையாது,
தோல்விகள் யில்லயேல்,
வெற்றி யென்பது கிடையாது,
மேடு பள்ளம் யில்லாமல்,
ஆறுகளும் ஓடாது,
நேரங்கள் போனால்,
விலைக்கு வாங்க முடியாது.

எதற்கும் துணிந்து சென்றால்,
வெற்றிக்கு தடையேதும் யில்லை,
நம்பிக்கை இருந்தால்,
இமயமும், எறும்புக்கு உண்டு..
கால சூழ்நிலை போல்,
வாழ்வின் சூழ்நிலைக்கு 
நிற்காதே - உனக்கும் சிறகுகள் 
உண்டு மறக்காதே

பனி துளியின் அழகு,
புல்லுக்கு தெரியாது,
திறமை - உன்னை
மிதித்தவனுக்கு புரியாது,
காலங்கள் சென்றாலும்,
கனவுக்கு குறையேது,
கனவுகள் தூங்காமல்,
தினம் நீ போராடு..
மண் மேலே,
இன்னுயிர்க்கும் 
வாய்ப்புகள் உண்டு,
பொறு மனமே,
இது மாறும் பொற்காலமே,
உனக்கான நேரம்,
வெற்றிக்கான பயணம்,
எழு மனமே...

Add Your Comments

Say Something

 

Comments

No comments.