விடை தேடி சென்றேன்

By Admin - 11 Jul 2020 807 0

விடை தேடி சென்றேன்,
வாழ்க்கையின் கேள்விகளுக்கு !!!

தெரு எங்கும், 
திரிந்து, தெரிந்து,
கொண்டது,
தெரு நாய்களின்,
பரி பாஷைகள்

அலைந்து, அலைந்து,
ஓய்ந்து, தேயந்தது,
காலணிகள் மட்டுமல்ல, 
என் கால அணிகளும்

இந்த சூழலில்,
பஞ்சம் என்பது, 
பசிக்கு மட்டுமல்ல - என்
வியர்வைக்கு கூட;
 ஏனோ
இரக்கம் இல்லை...

வறண்ட சூழல் மட்டும், 
காணும் திசை எங்கும்

எதிர்கால கனவுகளும்,
இறந்தகால சுமைகளும்,
ஒன்றாய் அரங்கேற்ற,
வெறும் கனவாகி போகிறது,
என் நிகழ்காலம்

காலங்கள் ஓடிவிடும், 
நாம் வாழ நினைத்த,
நொடிகள் எல்லாம்
என்றும் கற்பனையே !!!

Add Your Comments

Say Something

 

Comments

No comments.