ஓடி வா முருகா
By Admin - 04 Aug 2021 1011 0

ஆறுமுகனே, அய்யனே
ஓடி வா செய்யோனே..
மஹாசேனா, மகேசன் சேனா,
கூட வா கந்தனே...
ஓடி வா முகனே..
தேடி தேடி,
அருள் பெற,
கண்டேன்
உன்னையே,
நீயே - குகனே,
என்றும் துணையே;
முருகனே வா வா,
என் பாலனே வா..
அழகும் நீயே,
வீரமும் நீயே,
திருநீறும் நீயே,
திருவருளும் நீயே,
என் முருகனே,
ஓடி வா என் பாலனே..
தேனின் சுவையும்,
பாலின் நிறமும்,
உலகின் பொருளும்
நீயே - என் வேலனே
வா என் குறை தீர்க்கவே.
ஈசன் மகனே,
மயில் வாகனனே,
ஆறு தலைகொண்ட,
அறுபடையப்பனே,
முருகனே ஓடி வா - என்
அப்பனே...
ஆதி அங்கம் கலந்து,
ஆதாரமாய் வந்தவனே,
மலைகளிலும் - நீரிலும்
கலந்திருப்பவனே - என்
சித்தனே - நீயே - முருகனே
ஓடி வா கந்தனே..
சிந்தனையில் உருவாகி,
நித்திரையில் உறவாடி,
உருவிலே கருவான
உறவே என் முருகனே..
அல்லல் தீர்க்கும்,
நல்லை செய்யும் - மகனே
என் அழகனே ஓடி வா,
என்னோடு சேரவா - முருகா..
வாழும் நொடிகள்,
கர்ம வினைகள் - தீர்க்க
கரம் தர ஓடி வா முருகா,
செய்த வினைகள் தீர,
அறியாத குறைகள் போக,
கருணை கொண்டு வா முருகா,
உன்னோடு சேரவா முருகா..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
15 Oct 2021
அனிதாவும், அம்மாவும் ...
ஒரு வயது நிரம்பிய குழந்தை, அழுகை நிற்கவில்லை. கண்களில் கண்ணீரும், விழித்திரையில் ஏக்கமும், குரலில் வலியும், தழு தழுத்த மழலையில் ங்கா,ங்கா,ங்கா...என்று...
28 Aug 2025
என்னை அறியாமல்...
என்னை அறியாமல் விம்மி அழுகிறேன்,சட்டென்று வெறும் கோபங்கள் எல்லாம்,இன்று ஏனோ மௌனமாய் கடக்கின்றேன்..எதையோ நினைத்து மனதும் உதட்டோரமாய் சிரிக்கிறது...காரண...
06 Dec 2024
கண்ணாமூச்சி...
விளையாட யாருமில்லை,தனிமையின் தோழனாய்,மரத்தடியில்;ஏதோ பிம்பம்கண்ணாமூச்சி ஆடியது.சட்டென்று மேலே பார்த்தேன்...வெட்கத்தில்,வெண்மேகத்தில்,ஒளிந்தது சூரியன்!...