மறைக்காதடி, மறுக்காதடி
By Admin - 06 Dec 2021 937 0

காலங்கள் மாறும்,
திசைகள் நான்கும்,
தொலைந்து
போவோமே
நாமும்..
உன் விறல் பிடித்து
போகும் தூரம்
உலகின் நெடுந்தூர
பயணம்..
மறைக்காதடி,
மறுக்காதடி - என்
காதலை துரத்தாதேடி
விழியில் விழுகிறேன்,
ஓரமாய் கரைகிறேன்,
மரபணு மாற்றம்
செய்கிறாய் என்னுளே..
உன் மடியில்
நானும் உறங்கிட,
நிலவும் மறந்து
போகும் மறைந்திட,
இமைகளின்
சிமிட்டலும்,
நின்று போகும்
இமைக்காது
உன்னை கடந்து
போக..
மறைக்காதடி,
மறுக்காதடி - என்
காதலை துரத்தாதேடி
எங்கோ நீ இருக்க,
இங்கே உன்னை அணைக்க,
நினைவுகள் கடத்தி போகும்
காலம் கடந்தும்
காதல் கதை சொல்லும்..
அடி,
நீராவியே உன்னாலே,
காற்றில் மெல்ல மெல்ல,
கரைகிறேன்..
மாயாவியே,
தன்னாலே என்னை
மறக்கிறேன் - இந்த
உலகத்தை புதிதாய்
ரசிக்கிறேன்..
மறைக்காதடி,
மறுக்காதடி - என்
காதலை துரத்தாதேடி
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
24 Oct 2020
நிலை மாறுமோ......
வாழ்க்கையே தேடுறேன்,கண்களை கட்டியே,கண்ணாமூச்சி ஆடுறேன்,எந்த திசையிலும்,வழிகள் தெரியல..எங்கோ முடியுது,இங்கேயும் தொடங்கது,கனவுகள் ஏனோ,கனவாய் மட்டும் போன...
27 Jun 2020
Single Tea
This is a real story that happened 10 years back, and thought of sharing now.The one and only person working on time is our office tea boy..Sharp 10:3...
13 May 2023
அண்ணலாரும்
பிறப்பறுக்கும் பெரியோனே,நின் கழல் எய்தற்கு; கனவினாற் கொண்டேனே..யாயும்;எந்தையும் நீயே,எவ்வழியோ, ஒய்யென சேரயான் உரைப்பன்...அண்ணலாரும் என்னுளே,வாழ்வ...