மீண்டும் காதலிப்பேன்
By Admin - 27 Jan 2022 761 0

நீயென்னை பார்த்ததும்
என்னை மறந்தேன்
உன் புன்னகையில்
உயிர் தொலைத்தேன்
கடை விழி ஓரம்
என்னை பதிவிட
காற்றாய் மாறி
உன்னுள் வருவேன்
சிறு பிள்ளை
போலே - ஏனோ
நெஞ்சம் துள்ள
எங்கிருந்தாய்
இத்தனை நாளாய்
பனி துளிமேல்
சூரியன் போலே
உன்னை கண்டதும்
உருகி போனேன்
காதோரம்
முடி அசைவதில்
ஏனோ,
இதயத்தில்
கணம் கூட
கண்டேன்
உன் விரல்
பிடித்து - போகின்ற
தூரம், விண்வெளியும்
சிறு தூரம் என்பேன்
விரல் விடை
பெரும் நேரம்
சிறு விரல் நுழைந்திட
ஏங்கி நின்றேன்
கால் தொடும்
கடல் நுரையும்
உன் பாதம் பட்ட
தடயம் என்பேன்
மறையும் நிலவும்
உன் பார்வை
வீசிய
வெட்கம் என்பேன்
நீ தூங்கும்
போதும்
உலகமே
நின்றிட கண்டேன்
விடியும் பொழுதும்,
உன் மடியினில்
சாய்ந்திட வேண்டும்
என்றேன்
நீயில்லை யென்றால்,
பிறந்து வருவேன்
மீண்டும் காதலிப்பேன்...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
27 Jun 2020
அந்த கடவுளை கண்டால் !!!...
மாயம் நிறைந்த உலகமடா,அதில் நீயும் நானும் காகிதமடா;காற்றுகள் வீசும் திசையின் எதிரே பயணிக்கும் சிறு&nb...
22 Jun 2021
முத்துகாளையும், பருத்தியம்மாளு...
முத்துகாளையும், பருத்தியம்மாளும் கதை..அழகான ஒரு கிராமம், சுத்தி எங்கேயும் நிறைய மலைகள், வயல்கள், பெரிய தோப்பு, வழி எங்கும் மரங்கள், அங்கே அங்கே சில கு...
04 Feb 2020
கடவுளை தேடி !!!...
விழியுண்டு, வழியுண்டு, காணாத கண் கொண்டு !!! நின்னை தேடா - எங்கும்,தேடல் தொடர்ந்திட...நித்தம் தோன்றும்; பெயரெல்லாம் உன்னை அழைத்திட,...