Excellent mama
அப்பா
By Admin - 18 Jan 2023 760 1

உன் உயிரணுவில்,
என்னை நகலெடுக்க..
நின் முதற் வங்கணம்
நீயன்றோ..
கருவறையில்,
என்னை காணாது,
நீ கொண்ட காதல்..
அதன் யான் காணாமல்,
யாதனம் கொண்டேனோ..
சிறு விதையாக,
மண்ணில் வந்த என்னை...
முதலில் கண்டவுடன் - நீ
என்ன நினைத்தாயோ...
இருளை தகர்க்கும் தகிழி
போல் நீ நின்றாயோ !!!
நீ அள்ளியணைத்த
கணங்கள், அத்தனையும்
ஒரு பெட்டகமாய் என்னுள்
அகழ் எடுத்தாலும் - அது
ஊற்றெடுக்கும் !!!
முதற் அன்னம்,
நானெடுக்க - உன்
தோள் மீது என்னை
சுமந்தாய் - அன்று,
சொன்ன நிலா
சோறு கதைகளும்,
ஒற்றை கன்னன் கள்ளத்தனமும்..
இன்றும் இனிமை !!!
ஏன்னெனில்...
அந்த நிலவை பிடிக்க
முடியாது என்று தெரிந்தும்,
கதையாக கையில் வைத்து
கொண்டு - என் நெஞ்சில்
நம்பிக்கை என்னும் விதையை
விதைத்த முதல் தெய்வம் நீ !!!
அப்பா...
Add Your Comments
Say Something
Comments
See More Stories
17 Jun 2021
முத்துகாளையும், பருத்தியம்மாளு...
அழகான ஒரு கிராமம், சுத்தி எங்கேயும் நிறைய மலைகள், வயல்கள், பெரிய தோப்பு, வழி எங்கும் மரங்கள், அங்கே அங்கே சில குளங்கள், குட்டைகள், எப்போதும் வீசும் ஜி...
09 Feb 2020
பிஞ்சு முகம் !!!...
பிஞ்சு முகம் வாட,பால் வாங்க இருபது ருபாய் ; பசியில் அழுகை வீட்டை மட்டுமில்லை - என்உயிரையும் இரண்டாகியது..உண்டில் உடைக்கப்பட்டது - ஏனோ,மறந்து போனேன் அத...
13 Mar 2024
மோகம்
கடைசியாய்,முகம் பார்த்துக்கொள் என்ற - ஒற்றை வார்த்தைகூட கேட்க முடியாத அவலம் தான் வெளிநாட்டு வேலையின் மோகம்.....